திருவள்ளூர், மார்ச் 31- பொன்னேரி பகுதியில் ஒரே நாளில் 3 மாணவர்கள் பலி யான சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அச்சரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழி லாளி சதீஷ் என்பவரது மகன் பிரகதீஷ்வரன். இவர் பொன்னேரி அடுத்த கொக்குமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல மார்ச் 30 அன்று பிரகதீஷ்வரன் பள்ளிக்கு சென்ற நிலையில், பள்ளியில் கழிவறையில் வழுக்கி விழுந்து தலையில் காய மடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பொன்னேரி அரசு மருத்துவ மனையில் மாணவன் பிரகதீஸ்வ ரனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர்.தகவல் அறிந்து வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரணி சுப்பிரமணி நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாஸ்கர் என்பவரது மகன் தமிழ்செல்வன். ஆரணியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். வியாழனன்று (மார்ச் 30), பள்ளிக்கு சென்ற நிலையில் பள்ளியில் இரு மாணவர்களுக்கிடையே பேனா வாங்குவதில் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் காயமடைந்த மாணவன் தமிழ்ச்செல்வனை ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடலை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரி வித்து மருத்துவமனையில் போராட் டத்தில் ஈடுபட்டனர். மீஞ்சூரை அடுத்த வாயலூர் குப்பத்தை சேர்ந்த மோனீஷ் என்ற 10வயது மாணவரை குளத்தில் பிணமாக மீட்டனர். இப்படி அடுத்தடுத்து இளம் மாணவர்கள் பலியான சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரியில் தனி யாருக்கு சொந்தமான பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 1500க் கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு ஒரே ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் மட்டும் உள்ளார். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகள் இல்லை. இருக்கும் கழிவறைகள் துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்தப் பள்ளியில் ஏற்கனவே 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுள்ளது. கல்வி நிலையம் அருகிலும், பேருந்து , ரயில் நிலையம் ஆகிய பகுதி களிலும் கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் தாராளமாக கிடைக்கிறது. இதனால் வன்முறை எழ காரணமாக அமைகிறது. ஒரு சில திரைப்படங்கள், சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி தொடர்கள் போன்றவற்றிலும் வன்முறை கட்சிகள் வருவதை தமிழ்நாடு அரசு தணிக்கை செய்ய வேண்டும்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாண வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில் கழிவறைகளை அதிகரிக்க வேண்டும், மதிப்பெண், போட்டித் தேர்வுகள் என்று மட்டும் இல்லாமல், சமுகம் சார்ந்த விசயங்களை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும், உடற்பயிற்சி கூடங்கள், நூலகம் ஆகியவற்றில் உரிய கவனம் செலுத்த வேண்டும். பள்ளிகளில் கண்காணிப்பு குழுக்கள் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தி கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு உரிய விதத்தில் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும், பலியான மாணவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் உரிய நிவாரணத்தை மாவட்ட ஆட்சியர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் வலியுறுத்தியுள்ளார்.