திருப்பூர், டிச.17- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அமைப்புத் தலைவர் பாப்பா உமாநாத் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள் வேலம்பாளையம் நகரக் குழு சார்பில் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அமைப்புத் தலைவரும், பெண் விடுதலைப் போராளியுமான தோழர் பாப்பா உமாநாத் அவர்களின் 14 ஆம் ஆண்டு, நினைவு நாள் செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது. வேலம்பாளையம் நகரக் குழுவின் சார்பில், அனுப்பர்பாளையத்தில் பாப்பா உமாநாத் உருவப் படம் வைத்து, மாலை அணிவித்து, மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஷகிலா, நகரச் செயலாளர் ர.கவிதா, நகரத் தலை வர் வே.அழகு, துணைச் செயலாளர் ஆ.கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு செவ்வணக்கம் செலுத்தினர். அணைப்பாளையம் கிளையில் நடந்த நிகழ்வில், நகர துணைச் செயலாளர் ப. செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதே போல் வேலம்பாளையத்திலும் பாப்பா உமாநாத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.