திருப்பூர், டிச.17- திருப்பூர் அருகே ஈட்டிவீரம்பாளை யத்தில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட நிலப் பட்டாவிற்கு இடத்தை அளந்து தரக்கோரி நடைபயணம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை மாவட்ட ஆட்சியர கத்துக்கு அழைத்துச் சென்று, மாவட்ட வரு வாய் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி னார்.
வரும் வெள்ளிகிழமைக்குள் நிலத்தை அளந்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக வரு வாய் அலுவலர் தெரிவித்தார். இதற்கு ஒப்புக் கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியினர், நிர்வாகம் வாக்குறுதி அளித்தபடி நடவடிக்கை எடுக்கா விட்டால் அங்கு குடியேறும் போராட்டம் நடத் துவதாக தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா விற்கு உட்பட்ட ஈட்டிவீரம்பாளையத்தில், க. ச.எண் 544 அரசு புறம்போக்கு நிலத்தில், நிலமற்ற ஏழை மக்களுக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப் பட்டது.
ஆனால், பயனாளிகளுக்கு நிலம் அளந்து கொடுக்கவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி அந்த நிலத்தில் குடியேற முயற்சித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி வட்டாட்சியர் நான்கு நாட்களில் தீர்வு ஏற்படுத்துவதாக உறுதியளித்தார்.
எனி னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து செப்.30ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு மாத காலத்திற்குள் பட்டாவிற்கான நிலம் அளந்து தருவதாக அப்போதைய வட்டாட்சியர் உறு தியளித்தார்.
ஆனால் அவர் பணியிட மாறுதல் செய்யப்பட்டு புதிய வட்டாட்சியர் பொறுப் பேற்றதால் நிலம் அளந்து கொடுப்பதில் தாம தம் ஏற்பட்டது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட் சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடைபயணம் மேற்கொண்டு மாவட்ட ஆட்சி யரைச் சந்தித்து நிலத்தை அளந்து தரும்படி கேட்கப் போவதாக அறிவித்தனர். அதன் அடிப்படையில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் தலைமை யில் ஈட்டிவீரம்பாளையம் பகுதி மக்கள் சுமார் நூறு பேர், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பட் டாவிற்கு இடத்தை அளந்துதரக் கோரி பெரு மாநல்லூர் நால் ரோட்டில் இருந்து நடைப யணத்தை துவங்கினர்.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில், காவல்துறை யினர் வாகனத்தில் அவர்கள் அனைவரை யும் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆட்சியரகத்தில், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஆர். காளியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சம்சீர் அகமது, ஒன்றியக்குழு உறுப்பினர் பி.கே.கருப்பசாமி மற்றும் சில பயனாளிக ளுடன் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்தி கேயன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வரும் வெள்ளிக்கிழமைக்குள் இடத்தை அளந்து தர நடவடிக்கை எடுப்ப தாக வருவாய் அலுவலர் கூறினார்.
அவர் உறுதியளித்தபடி, நிலம் அளந்து தரப்படா விட்டால், நேரடியாக ஈட்டிவீரம்பாளையம் நிலத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுப டுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், மேற்குபதி ஊராட்சி கொண் ணாங்காடு பகுதியில் வசிக்கும் ஓடை புறம் போக்கு பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப் பட்ட 35 குடும்பங்களுக்கு உடனடியாக இடத் துடன் புதிய வீடு கட்டித் தர வேண்டும். பெரு மாநல்லூர் ஊராட்சி குன்னதூர் சாலையில் சின்னப்பள்ளம் பகுதியில் வசிக்கும் அனைவ ருக்கும் இலவச பட்டா வழங்க வேண்டும் என வும், மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஒற்றுமையாக இருந்தால் வெற்றி உறுதி:
நடைபயணத்தை துவக்கி வைக்கும்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் பேசுகையில், எதிர் தரப்பினர் இடம் கிடைக்காமல் இருக்க பல்வேறு சூழ்ச்சிகளைசெய்வார்கள். நாம் ஒற்றுமையாக இருந்தால் எல்லாவற்றையும் கடந்து, நமது இடத்தைப் பெற முடியும். இப்பகுதி மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் உறுதியாக துணை நிற்கும் என்று தெரிவித்தார்.