திருப்பூர், டிச. 17 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்டக்குழு சார் பில் “கம்யூனிஸ இயக்கத்தின் வளர்ச்சிப் பாதை” என்ற தலைப் பில் ஐந்து நாட்கள் காலை நேரத் தொடர் வகுப்பு செவ்வாயன்று தொடங்கியது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் முதல் நாள் நடை பெற்ற வகுப்புக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.காளியப்பன் தலைமை ஏற் றார். இதில் 1848 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதல் 1871 பாரீஸ் கம் யூன் வரை என்ற தலைப்பில் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு கருத்துரை ஆற்றி னார். அப்போது அவர் கூறுகையில், 1848ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் லீக் அமைப்பின் சார்பில் மார்க்ஸ், ஏங் கெல்ஸ் சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நூலை வெளியிட்டனர்.
ஏடேறிய வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வர லாறே என்று கூறும் அந்த நூல் சமூக வரலாற்றில் ஆதிப் பொதுவுட மைச் சமுதாயம், அடிமைச் சமுதா யம், நிலவுடமைச் சமுதாயம் மற்றும் முதலாளித்துவ சமுதாய மாக வளர்ந்திருப்பதையும், தற் போதைய முதலாளித்துவ சமு தாய அமைப்பில் முதலாளித்துவ வர்க்கத்திற்கும், தொழிலாளி வர்க் கத்துக்கும் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தையும் இலக்கிய நடை யுடன் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் கூறி யுள்ளனர்.
அன்றைய ஐரோப்பா வில் முதலாளித்துவ சமூக அமைப்பு முறை வளர்ச்சி பெற்ற நிலையில், பிரான்ஸில் தொழிலாளி வர்க்கம் தலைமை ஏற்று 1871ஆம் ஆண்டு புரட்சி நடத்தி அதிகாரத் தைக் கைப்பற்றினர். பாரீஸ் கம் யூன் என்றழைக்கப்படும் அந்த புரட் சியில் தொழிலாளி வர்க்கம் தேர்தல் நடத்தி தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தனர், தூக்குத் தண்ட னையை ஒழித்தது, குழந்தைத் தொழில் ஒழிப்பு, பெண்களுக்கு சுதந்திரம், அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட பல்வேறு புரட்சிகர நடவ டிக்கைகளை மேற்கொண்டனர்.
எனினும் பிரான்ஸ் முதலா ளித்துவ வர்க்கம் 30 ஆயிரத்திற் கும் மேற்பட்ட பாட்டாளி வர்க்கத்தி னரைப் படுகொலை செய்து அந்த புரட்சியை ஒடுக்கியது. பாரீஸ் கம் யூன் அனுபவத்தை மார்க்ஸ், ஏங் கெல்ஸ் ஆராய்ந்தனர். முதலாளித் துவ வர்க்கத்தின் மேலாதிக்கத்துக் குக் காரணமான உடைமைகள், வங்கி மூலதனம் ஆகியவற்றை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றாததா லும், கிராமப்புற விவசாயிகளை தங்களுக்கு ஆதரவாக அணிதி ரட்டாததாலும் பாரீஸ் கம்யூன் தோல்வி அடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். பாரீஸ் கம்யூன் அனுபவத்தை உள்வாங்கிக் கொண்டு பாட்டாளி வர்க்கம் புரட்சி கர குணாம்சத்துடன் போராடியது, என்று எஸ்.ஜி.ரமேஷ்பாபு கூறி னார். இந்த தொடர் வகுப்பில் சுமார் நூறு பேர் கலந்து கொண்டனர்.