பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
உடுமலை தாலூக்க கரட்டுமடம் பகுதியில் உள்ள காந்தி கலா நிலையம் என்ற அரசு உதவி பெரும் பள்ளியில் தீபாலபட்டி பகுதியை சேர்ந்த அசோக்குமார் (வயது 37) தமிழ் ஆசிரியராக பணிபுரித்து வருகிறார். ஆசிரியார் அசோக்குமார் பள்ளி படிக்கும் மாணவிக்கு பாலியல் தொத்தரவு செய்ததாக கடந்த 4 ஆம் தேதி திருப்பூர் சைல்டு லைனுக்கு(1098)புகார் வந்துவுள்ளது.
அதில் பள்ளி மாணிவிகளுக்கு தனிப்பட்ட முறையில் வாட்ஸப் செயலியின் மூலம் பாலியல் எண்ணங்களை தூண்டும் வகையில் குறுச்செய்திகளை அனுப்பி மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்து வருவதாக புகார் பெறப்பட்டுவுள்ளது.
சைல்டு லைனுக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கடந்த 5 ஆம் தேதி கள ஆய்வில் ஆசிரியாரின் குற்றம் கண்டுபிடிக்கபட்டுவுள்ளது.
பின்னர் பாதிகப்பட்ட மாணவிகளின் பொற்றோர்கள் யாரும் புகார் தர முன்வராத காரணத்தால் அசோக்குமார் தொலைபேசியில் இருந்த ஆவணங்கள் படியும் சைல்டு லைனுக்கு கிடைத்த ஆவணங்கள் படி, உடுமலை மகளிர் காவல்நிலையத்தில் ஆசிரியர் அசோக்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார்.