அவிநாசி, டிச. 31- திருப்பூர் மாவட்டம் விசைத்தறி தொழில் பாதுகாப்பு, தொழிலாளர் வாழ்வுரிமை கோரிக்கை மாநாடு சிஐடியு சங்கத்தின் சார் பில் ஞாயிறன்று அவிநாசி கங்கவர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பனியன் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தில் இணைந்த சங்கமாக விசைத்தறி தொழிலாளர் சங்கம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் 1972 ஆம் ஆண்டு முதல் முதலாக விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் பேச்சுவார்த்தை நடத்தி, போனஸ் பெற்றுத் தரப்பட்டது. 1979ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பல்வேறு வீரம் செறிந்த விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டங்களும், சீராணம்பாளையம் பழ னிச்சாமி உள்ளிட்ட தோழர்களின் தியாகத் தாலும், விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, போனஸ், விசைத்தறி உரிமை யாளர்களுடன் பேசி ஒப்பந்தம் ஏற்படுத்தி தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகளை பெற்றுத் தந்தது இந்த சங்கம். விசைத்தறி தொழிலின் நிலைமை விசைத்தறி பாரம்பரியமான விசைத்தறி தொழிலில் 7 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர்கள், உரிமையாளர்கள் என சுமார் 12 லட்சம் பேர் இதில் ஈடுபட்டு உள்ளனர். தமிழகத்தில் ஏறத்தாழ 15 மாவட் டங்களில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி இருந் தாலும் கோவை திருப்பூர், ஈரோடு மாவட்டங் களில் இத்தொழில் அதிக அளவில் நடை பெறுகிறது.
அதி நவீனமான ஒரு தறி நிறுவனத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 15 லட்சம் முதலீடு தேவை. அப்படியே தறிகளை நிறுவினாலும், துணிகளை சந்தையில் விற்பது சவால் ஆனது. இந்தச் சூழலில் தற்போது சாதா தறி தொழிலில் அடித்தளம் ஆட்டம் கண்டு வருவ தோடு பலர் தொழிலை விட்டு வெளியேறும் நிலை உள்ளது. பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி வரி, நூல் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவை காரணமாக கூலி கொடுக்க மறுக்கும் நிலையிலும், விசைத்தறியாளர்கள் வாங்கிய கடனை செலுத்த முடியாது நிலை யிலும் விசைதறித் தொழில் முடங்கி உள் ளது. இதனால் வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும், விசைத்தறியாளர்களுக்கு தனி ரகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், விசைத் தறியில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளியை சந்தைப்படுத்த தனி ஏற்பாடு வேண்டும், நூல் விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் அப்போதுதான் விசைத்தறி தொழிலை பாதுகாக்க முடியும் என சிஐடியு சங்கம் கூறுகிறது. தொழிலாளர்களின் நிலை விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வா தாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற் போது ஏறி இருக்கும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி உயர்வு, வேலைக்கேற்ப வருமான மும் இல்லை.
ஒரு தொழிலாளி வேலை செய் யும் விசைத்தறிகளின் எண்ணிக்கை 8 தறி களில் இருந்து 16 ஆகவும் அதிகமானது. தவிர தொழிலாளர்களின் உடல் உழைப்புக்கு தக்க படி கூலி கிடைக்காத நிலை இருக்கிறது. தின சரி ரூபாய் 400 முதல் 500 மட்டுமே பெறுகின் றனர். இன்று ஒவ்வொரு தொழிலாளியும் இரண் டரை லட்சம் வரை கடன் பிரச்சனையில் சிக்கி இருப்பதும், நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவதும் என கடன் மேல் கடன் வாங்கி சிக்கியுள்ளனர். கடனை கட்ட முடி யாமல் தற்கொலை செய்து கொள்ளும் அள விற்கு விசைத்தறி தொழிலாளர்களின் நிலைமை மோசமாகி, வாழ்க்கையை நடத்த முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். ஆகவே நலிந்து வரும் தொழிலை பாதுகாப்பதற் கும், தொழிலாளர்களை பாதுகாக்கவும், விசைத்தறி தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் வாழ்வுரிமை கோரிக்கை சிறப்பு மாநாடு நடத்தப்படுகிறது. அவிநாசியில் கங்க வர் திருமண மண்டபத்தில் இன்று காலை 9 மணி அளவில் சிஐடியு தொழிற்சங்க தலைவர் கள் கலந்து கொண்டு இதில் உரையாற்ற உள் ளனர்.