சென்னை:
பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியை பாதுகாக்க அனைத்து தரப்பு மக்களும் முன்வரவேண்டும் என்று சென்னையில் செவ்வாயன்று எல்ஐசி 63ஆண்டு அதிசயம், தேச வளர்ச்சியின் அடையாளம் என்ற தலைப்பில் நடைபெற்ற தமிழ் மாநில சிறப்பு மாநாடு வேண்டுகோள் விடுத்துள்ளது.அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டிற்கு செந்தில்குமார் தலைமை தாங்கினார். எஸ்.ரமேஷ் குமார் வரவேற்றார். சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா, எல்ஐசி அதிகாரிகள் சங் கத்தின் டி.ஏ.உண்ணாமலை, என்.எஃப்.ஐ.எஃப்.டபிள்யு.ஐ மண்டல செயலாளர் எஸ்.ஆனந்த், எல்.ஐ.ஏ.எஃப்.ஐ பி.ஆர்.சீனிவாசன், லிகாய் நிர்வாகி கே.தாமோதரன் உள்ளிட் டோர் பேசினர். தீர்மானங்களை பொது ப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் தென்மண்டல நிர்வாகி ஜி.ஆனந்த் முன்மொழிந்தார். சென்னை இரண்டு கோட்டத்தின் காப்பீட்டு ஊழியர் சங் கத்தின் நிர்வாகி தனசெல்வம் நன்றி கூறினார்.இந்த மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு:
எல்ஐசி நிறுவனத்தை பாதுகாக்க நடைபெறும் சிறப்பு மாநாட்டில் பங் கேற்கிற முதல் நிலை அதிகாரிகள் , வளர்ச்சி அதிகாரிகள் , முகவர்கள், ஊழியர்கள் அனைவரும் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் வளர்ச்சி , சந்தைப் பங்கு , எதிர்காலத்தை பாதுகாக்க உறுதியேற்கிறார்கள் . எல் . ஐ . சியின் பங்கு விற்பனைக்கான முன் மொழிவு மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள பின்புலத்தில் இச்சிறப்பு மாநாடு நடைபெற்றது.
ரூ.2611 கோடி ஈவுத்தொகை
எல்.ஐ.சி.க்கு மூலதனத் தேவையோ, இதன் பங்கு விற்பனைக்கான எந்தவொரு பொருளாதார காரணிகளோ இல்லாத நிலையில் இந்த பங்கு விற்பனை எந்த வகையிலும் பயனளிக்கத்தக்கது அல்ல என்பதை மத்திய அரசுக்கு இம்மாநாடு சுட்டிக் காட்டுகிறது . எல் . ஐ . சி கடந்த நிதியாண்டில் டிவிடெண்ட் ஆக மட்டும் அரசுக்கு தந்துள்ள தொகை ரூ.2611 கோடிகள் . 1956 ல் வெறும் 5 கோடி அரசு முதலீட்டில் துவக்கப்பட்ட எல்.ஐ.சிக்கு அதற்கு பின்னர் கூடுதல் முதலீடே தேவைப்படவில்லை என்பதே உண்மை. இந்திய பொருளாதாரத்திற்கு எல் . ஐ . சியின் பங்களிப்பு மகத்தானதாகும்.
கட்டமைப்பு திட்டங்களுக்கு எல்ஐசி உதவி
12வது ஐந்தாண்டு (2012 - 17) திட்டத்திற்கு எல்.ஐ.சியின் பங்களிப்பு ரூ . 14 , 23 , 055 கோடிகள். சராசரியாக ஆண்டிற்கு ரூ.2,84,000 கோடிகள். 13வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே ( 2017 - 19 ) அரசுக்கு தந்திருப்பது 7,01,483 கோடிகள். ஆண்டு சராசரி 3,50,000 கோடியாக உயர்ந்துள்ளது. எல்.ஐ.சி யின் சொத்து மதிப்பு 32 லட்சம் கோடிகள். ரயில்வே , நெடுஞ்சாலை , துறைமுக மேம்பாடு, மின்சாரம் , நீர்ப்பாசனம், குடிநீர் என அரசின் ஆதாரத் திட்டங்க
ளுக்காகவும் , சமூக நலனுக்காகவும், அரசின் பத்திரங்களிலும் முதலீடு செய்துள்ள தொகை ரூ.28,84, 331 கோடிகள். 1956ல் 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்பட்ட போது “ மூலை முடுக் குக்கு எல்லாம் இன்சூரன்ஸ் பாதுகாப்பை கொண்டு போய் சேர்ப்பதே லட்சியம்” என அறிவிக்கப்பட்டது.தனியார்களால் 245 நிறுவனங்கள் இருந்தும் இன்சூரன்ஸ் பரவலை செய்ய முடியவில்லை 1999க்கு பின்னர் மீண்டும் இன்சூரன்ஸ் துறையில் வந்த பன்னாட்டுநிறுவனங்களும் தனியார்களுமாவது சாதாரண மக்களுக்கு இன்சூரன்ஸ் சேவையை விரிவு செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆனால் அதை ஒரே நிறுவனமாக எல்.ஐ.சி செய்துள்ளது. 40 கோடி பாலிசிகளை இன்று எல்.ஐ.சி வைத்திருக்கிறது . இவ்வளவு பாலிசிகளை வைத்துள்ள உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. பாலிசிதாரருக்கான உரிமப் பட்டுவாடாவை 98.4 சதவீதம் என்கிற அளவில் வைத்துள்ளது. இதுவும் உலகின் நம்பர் 1 சதவீதம். கடந்த 4 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் மட்டுமே அந்நிய முதலீடு இன்சூரன்ஸ் துறையில் வந்துள்ளது. ஆனால் எல்.ஐ.சி ஓராண்டிற்கு அரசின் திட்டங்களுக்கு 3.50 லட்சம் கோடி தருகிறது . இந்த நிலைமையில் எல்.ஐ.சி பங்கு விற் பனை என்கிற முடிவு ஏற்கத்தக்கதல்ல. மக்கள் மத்தியில் இக்கருத்தை எடுத்துச் செல்வோம், மத்திய அரசின் முடிவை திரும்பப் பெறச் செய்வோம் என்று இம் மாநாடு உறுதியேற்கிறது.
சந்தையில் வலுவான நிறுவனம்
நடப்பு நிதியாண்டிலும் டிசம்பர் வரையிலும் 76 சதவீத சந்தையை பாலிசி எண்ணிக்கையிலும் , 72 சதவீத சந்தையை பிரிமிய வருவாயிலும் வைத்துள்ளது . 23 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களை எதிர்கொண்டு போட்டியில் எல்.ஐ.சி அடைந்துள்ள மகத்தான வெற்றிக்காக வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள் அனைவரையும் இச்சிறப்பு மாநாடு மனதார வாழ்த்துகிறது. பொதுத் துறையைப் பாதுகாக்கிற போராட் டம் இரண்டு முனைகளில் நடந்தேற வேண்டியுள்ளது. ஒன்று மக்கள் கருத்தை உருவாக்குவது ஆகும். இதர உழைப்பாளி மக்கள் மத்தியில் எல்.ஐ.சியைப் பாதுகாப்பது இந்திய நாட்டின் சுயசார்பை, வளர்ச்சியை, இன்சூரன்ஸ் பரவலை பாதுகாப்பது என்பதை எடுத்துரைத்து அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும். இரண்டாவது, எல்.ஐ.சியின் வணிகத்தை, சந்தைப் பங்கை தக்க வைப்பதாகும். மக்களின் நம்பிக்கையை பெற்று இப் பணியை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
வணிக ஆண்டின் கடைசி மாதங்களில் உள்ளோம். ஜனவரி மாத வணிகத்திலும் இந்த நம்பிக்கை வெளிப் பட்டுள்ளது. மேலும் வலுப்பட்டுள் ளது. இதே வேகத்தை, முன்னேற் றத்தை வரும் நாட்களிலும் தக்க வைக்கவும், அதிகரிக்கவும் இச் சிறப்பு மாநாடு தீர்மானிக்கிறது. எல்.ஐ.சியை பாதுகாக்கவும், பலப்படுத்தவும் எல்லா பகுதி மக்களும் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் நல்குமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.