அவிநாசி, செப்.9-
பழங்கரை ஊராட்சியை இணைத்து அவிநாசியை நகராட்சி யாக தரம் உயர்த்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சியினர் வலி யுறுத்தியுள்ளனர். தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் திருமுருகன்பூண்டி பேருராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத னைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வினித் தலைமையில் ஞாயிறன்று, திருமுருகன்பூண்டி நகராட்சி உடன் பழங்கரை ஊராட்சி இணைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அவிநாசியிலுள்ள மர்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் நிர் வாகிகள் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், திரு முருகன்பூண்டி பேருராட்சி நகராட்சி யாக உயர்த்தப்படும் என்ற அறி விப்பை வரவேற்கிறோம்.
அதே நேரம், பழங்கரை ஊராட்சி பகுதி என் பது அவிநாசி பேரூராட்சிக்கு மிக அருகாமையில் உள்ள பகுதியாகும். இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக தினசரி அவிநாசிக்கு வந்து செல்பவர்கள். எனவே, பழங்கரை ஊராட்சி பகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, பழங்கரை ஊராட்சியினை அவிநாசி பேரூராட்சியுடன் இணைத்து, அவிநாசியை நகராட்சி யாக தரம் உயர்த்தி செயல்பாட்டுக் குக் கொண்டுவர உரிய ஆணை பிறப்பித்து உதவிட வேண்டும் என தெரிவித்தனர்.
முன்னதாக, இந்த செய்தியாளர் கள் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப் பினர்கள் முத்துசாமி, ஈஸ்வரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இசாக், சண்முகம், போபால், மதிமுக சுப்ரமணி, பாபு, காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், மணி, சாய் கண்ணன், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் ராயப்பன், விடுதலை சிறுத்தைகள் வெங்கடே சன் உட்பட பல்வேறு அரசியல் கட்சிக ளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.