திருப்பூர், டிச.17- தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூருக்கு வருகை தருவதை ஒட்டி இங்கு பல மாதங்களாகக் குண்டும், குழியுமாக கண்டு கொள்ளப்படாமல் இருந்த அவிநாசி சாலை அவசர அவசரமாக சீரமைக்கப்பட்டுள்ளது.
இதைப் பார்த்த இந்நகரத்தின் இதர பகுதி மக் கள், எங்கள் பகுதியிலும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. எனவே உதயநிதி ஸ்டாலின் அங்கும் வர வேண்டும் என எதிர்பார்ப்பதாகக் கூறினர். திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் கலைஞர் நூற்றாண்டு விழா நூலகம் திறப்பு மற்றும் திருப் பூர் மாவட்டத்தில் நடைபெறும் திட் டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டா லின் வர உள்ளார்.
இதை முன்னிட்டு அவிநாசி சாலை முழுவதும் சீர மைப்பு பணிகளை மாவட்ட நிர்வாகத் தினர் மேற்கொண்டனர். பல மாதங்க ளாக குழிகள் நிறைந்து காணப்பட்ட இச்சாலை வழியாகத்தான் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், தீய ணைப்பு துறை அலுவலகத்திற்கு செல்வோர் என அரசு உயர் அலுவ லர்கள் பலரும் சென்று வந்து கொண் டிருக்கின்றனர். தினமும் லட்சத்துக் கும் மேற்பட்டோர் சென்று வரும் இந்த சாலைகளில் இருந்த குண்டு, குழிகளில் சிக்கி பலர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
எனினும் சாலையைச் செப்பனிட மாவட்ட நிர் வாகமோ, நெடுஞ்சாலைத்துறையோ, மாநகராட்சி நிர்வாகமோ நடவ டிக்கை எடுக்கவில்லை. மேலும், சாலை சீரமைப்பு குறித்து கேட்டால், இது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உரிய சாலை என தெரிவித்து வந்த னர்.
ஆனால் தற்போது உதய நிதிக்காக சாலைகள் அவசர அவசர மாக ஒட்டுவேலை செய்து சீரமைக் கப்பட்டுள்ளன. இதைப் பார்த்து திருப்பூர் நகர மக் கள், வாகன ஓட்டிகள் ஆச்சர்யம் அடைந்ததுடன், உதயநிதி வரும் பாதையாக இருப்பதால்தான் இப்ப ணிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிந்தனர். ஏற்கெனவே திருப்பூர் மாநகரில் பி.என்.சாலை, பல்லடம் சாலை, ஊத்துக்குளி சாலை, மங்க லம் சாலை உள்ளிட்ட பிரதான சாலை கள் மட்டுமல்லாது, மாநகராட்சிக்கு உட்பட்ட ஏராளமான சாலைகளும் பயணிப்பதற்கு லாயக்கற்றதாக உள் ளன.
அண்மையில் போடப்பட்ட புதிய தார்ச்சாலைகள் கூட மழைக் குத் தாங்காமல் பல் இழித்துக் கொண் டிருக்கின்றன. உதயநிதி வருகைக்காக பிரதான அவிநாசி சாலையை உடனுக்குடன் சீரமைத்திருக்கும் அரசு நிர்வாகம், தங்கள் பகுதி சாலைகளைப் பற்றி புகார் தெரிவித்தாலும் மாதக்கணக் கில் கண்டு கொள்வதில்லை. எனவே இந்த சாலைகளைப் புதுப்பிக்க வேண்டுமென்றால், எங்கள் பகுதிக் கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டா லின் வருகை தர வேண்டும். அப் போதுதான், “இந்த சாலைகள் விபத் துகள் ஏற்படுத்தாதபடி, குண்டு, குழி களை குறைந்தபட்சம் ஒட்டு வேலை செய்தாவது சீரமைப்பார்கள், எங்க ளுக்கு விடிவு பிறக்கும்!” என்று எதிர் பார்ப்பதாக திருப்பூர் மக்கள் கூறு கின்றனர்.