திருப்பூர், ஜூலை 14 - திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை யின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் முதல் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்கிறது. இதனால் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர் மற் றும் கரூர் மாவட்டங்களில் பழைய ஆயக் கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு என சுமார் 54 ஆயிரத்து 634 ஏக்கர் விவசாய நிலங் களும், ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளக்கும் அமராவதி அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகு திகளில் பெய்த மழையால் அணையின் நீர்மட் டம் வெகுவாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளவு 90 அடி. தற்பெழுது 82 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கன அடி வருகிறது. மேலும் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் அணையில் இருந்து உபரிநீர் ஆற் றில் திறந்துவிடப்படும். எனவே கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.