districts

img

போராட்டப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்க: டிஆர்இயு வெற்றி விழாவில் தலைவர்கள் பேச்சு

திருப்பூர், டிச. 17 – இந்தியாவில் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து தொட ரும் ரயில்வே தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த, வரலாற்றுச் சிறப்பு மிக்கப் போராட்டப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று திருப்பூரில் நடைபெற்ற டிஆர்இயு வெற்றி விழாவில் தலை வர்கள் கூறினர்.

ரயில்வே தொழிற்சங்க அங்கீ காரத் தேர்தலில் டிஆர்இயு மகத்தான  வெற்றி பெற்றதற்கும், இத்தேர்தலில் ஒத்துழைப்பு வழங்கிய சிஐடியு நிர் வாகிகளுக்கு வாழ்த்தும், நன்றி தெரி வித்தும் திருப்பூர் சிஐடியு அலுவல கத்தில் செவ்வாயன்று கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூர் ரயில்வே கிளைத் தலைவர் எம்.பூபதி  தலைமை வகித்தார். இதில் கிளைச்  செயலாளர் எஸ்.நவீன் வரவேற் றார். டிஆர்இயு முன்னாள் மாநில நிர் வாகிகளில் ஒருவரான சாம்பசிவன்  அண்மையில் நடைபெற்ற ரயில்வே  தேர்தலில் கடுமையான சவால்க ளைச் சந்தித்து டிஆர்இயு பெற்றிருக் கும் மகத்தான வெற்றியை விளக்கி தொழிலாளர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக டிஆர்இயு தோழர்கள் பொறுப்புணர்வுடன், கடுமையாக வேலை செய்ய வேண்டும் என்று கூறி னார்.

இந்த விழாவில் வாழ்த்திப் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் சுதந்திரப் போராட்ட காலத்தில் மதவெறியர்களால் உயிருக்கு அச்சு றுத்தல் இருந்த நிலையிலும், இந் தியா, பாகிஸ்தான் இருபுறமும் மக்க ளைக் காத்து அவர்களை கொண்டு வந்த வேலையை செங்கொடி இயக்க ரயில்வே தொழிலாளர்கள் மேற்கொண்டதையும், அவச ரநிலை காலத்தில் ரயில்வே தொழி லாளர்களின் வீரஞ்செறிந்த போராட் டப் பாரம்பரியத்தையும் முன்னெ டுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

இவ்விழாவில் பேசிய சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ், பொன்மலையில் ஐந்து  தொழிலாளர்களை போராட்டத் தின்போது துப்பாக்கி சூடு நடத்திக் கொன்றதன் அடையாளமாக பொன் மலை சங்க நுழைவாயில் இரும்புக்  கதவில் துப்பாக்கி குண்டுகள் துளைத்திருக்கும் அடையாளத்தை நினைவுபடுத்தி ரயில்வே தொழிலா ளர்களின் நலன், தனியார் மயம் எதிர்ப்பு உள்ளிட்ட வர்க்கப் போராட் டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார்.

இதில்  சிஐடியு மாவட்டத் தலைவர் சி. மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஜி. சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரயில்வே தேர்தலின்போது உட னிருந்த சிஐடியு நிர்வாகிகள், ஊழி யர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் கிளைக்கு உட்பட்ட இருகூர் முதல்  ஏழு ரயில் நிலையங்களில் வேலை  செய்யும் டிஆர்இயு தொழிலாளர்கள்  மற்றும் சிஐடியு சங்கத்தினர் பெருந்தி ரளானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். நிறைவாக கிளைப் பொருளாளர் எம்.அசோக் நன்றி கூறினார்.