திருப்பூர், டிச.18- வணிக பயன்பாடுகளுக்கான வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்த, ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திருப்பூரில் புதனன்று கடை யடைப்பு போராட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அரசு வர்த்தக ரீதியான வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில அரசின் மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் அபரிமிதமாக உயர்த்திய சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை சார்பில், புதனன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திருப்பூர், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலுள்ள உணவகங்கள், பேக்கரிகள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், இதர வியாபார நிறுவனங் கள், வர்த்தக நிறுவனங்கள், டிபார்ட் மெண்டல் ஸ்டோர்கள், காய்கறி மளிகை கடைகள் உட்பட சின்னஞ்சிறு பெட்டிக் கடைகள் வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் வரிக் கொள்கைக்கு எதிராக திருப்பூர் மாவட்ட வர்த்தகர்கள், சிறு, குறு நடுத்தர வியாபாரிகள், தங்கள் கடுமையான கோபத்தை இந்த போராட்டத் தின் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இந்த வரி உயர்வு கொள்கைக்கு எதிராக முன்ன தாக போராட்டங்களை நடத்திய நிலை யில், வியாபாரிகளின் கடையடைப்புக்கும் முழு ஆதரவு தெரிவித்திருந்தன. வேறு பல தொழில் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.