திருப்பத்தூர், மார்ச் 27- ஆம்பூரில் வசிக்கும் இந்துக் களும், இஸ்லாமியர்களும் மதநல்லி ணக்கத்தைப் பேணுவதில் இந்தியா வுக்கு முன்னுதாரணமாக விளங்கு பவர்கள் என்று திமுக பொதுச்செய லாளரும், மாநில நீர்வளத்துறை அமைச்சருமான க. துரைமுருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஆம்பூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அமைச்சர் துரைமுருகன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியிருப்பதாவது:
“ஆம்பூரில் உள்ள இஸ்லாமியர் கள் திமுகவை வளர்ப்பதில் உறு துணையாக இருந்திருக்கிறார்கள். அந்த நாகரிகத்தின் உச்சம் தான் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஒரு நாகரிக உடன்பாடு இங்கு உண்டு. ஒரு முறை இந்து சமூ கத்தினர் நகராட்சித் தலைவராக வந் தால், அடுத்த முறை இஸ்லாமிய சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் நகராட்சித் தலைவராக வரவேண்டும், இப்படி ஒரு ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் இந்தியாவிலேயே எங்கும் கிடை யாது.
இங்கு ஒருவருக்கு ஒருவர் ஒன்றாக இருப்பார்கள், இப்படித்தான் இந்தியாவும் இருந்தது. வாஜ்பாய் அரசு இஸ்லாமியர்களை வதைத்தது கிடையாது, அவர் பாஜகவாக ஆக இருந்தாலும், உருதில் கவிதை பாடு வார். இந்த நாட்டிலே பிறந்து, வளர்ந்து, இந்த மண்ணுக்கு அடியில் போகிறவன் யாராக இருந்தாலும் அவன் இந்தியக் குடிமகன், மதத்தால் மாறுபட்டு இருக்கலாம். ஆனால் நாட்டால் இந்தியர்கள், மொழியால், தமிழர்கள். எனவே தொழுகின்ற தெய் வங்கள் மாறுபட்டு இருக்கலாம், அப்படி இருக்கும் போது எல்லோ ரும் சகோதரர்களாக கருத வேண் டும்.
வடநாட்டில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துகிறார்கள், இஸ்லா மியர்கள் தொழுகை நேரத்தில் பாம்பு ஏறினாலும், கண்ணை திறக்க மாட்டார்கள், ஈட்டி முனையில் நிறுத்தி னாலும், ஈமான் மாற மாட்டார்கள், அப்படிப்பட்டவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது, அவர் களைக் காலால் எட்டி எட்டி உதைத் தார்களே இது என்ன நியாயம்? இந்த நாட்டின் குடிமக்கள் தானே அவர் களும்...
‘இப்படி ஒரு மதவெறி நடந்து விட்டது’ என்று, உலகம் சுற்றும் பெரி யவர் மோடி, ‘நான் வருத்தப்படு கிறேன், இது அநாகரிகம் இதை செய்த வர்களை தண்டிக்கின்றேன்’ என்று சொல்லி இருந்தால், அந்த நாகரி கத்தை நான் வரவேற்று இருப்பேன். ஆனால், இதுவரையில் தொழுகை நடந்தியவனை காலால் உதைத்த வர்கள் மீது ஒரு சஸ்பெண்ட் ஆர்டர் கூட செய்யவில்லை என்பதைத்தான் நான் சுட்டிக் காட்டுகின்றேன். எனவே, இந்த நாகரிகமற்ற அரசாங்கத்திற்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.