திருப்பத்தூர், நவ. 26 – இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, ஜவ்வாது மலையில் புதூர் நாடு முதல் கம்பு குடி கிராமம் வரை 15 கிலோ மீட்ட ருக்கு சாலை அமைக்கும் பணி தொடங்கி யுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலை, புங்கம்பட்டி நாடு பஞ்சாயத்துக்கு உட்பட்டது கீழானூர், கொத்தனூர், பேளூர், பெருமாள் கோயில் வட்டம்,சேர்க்கானூர், குடகு மலை, பெரும்பள்ளி, கல்லாவூர், சின்ன வட்டானூர், ரங்கசமுத்திரம், தகரகுப்பம், நடுவூர், பழையபாளையம், அரசமரத்து கொல்லை, கம்பு குடி, வசந்தபுரம் உள்ளிட்ட 18 கிராமங்களில் 12,250-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தி வருவது புதூர் நாடு முதல் கம்புகுடி கிராமம் வரை உள்ள 15 கி.மீ. மண் சாலை. இந்த சாலை பழுதடைந்துள்ளது. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பள்ளி செல்லும் மாணவர்கள் குறித்த நேரத்திற்குள் பள்ளி களுக்கு செல்ல முடியாமல் அவதிப்படு கின்றனர்.
அவசரத்திற்குகூட இருசக்கர வாகனங்களில் பயணிக்க முடியவில்லை. அப்படியே பயணத்தாலும் விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். மலைவாழ் மக்கள் நலனை கருதி, பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க்க் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புங்கம்பட்டு நாடு கிளை சார்பாக கடந்த 2023 மே மாதம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு, வருவாய் கோட்டாட்சியர், வனத்துறை அலுவலர்கள் ஆகியோருக்கு கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தினர். அந்த மனுவை மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை அளித்தனர். இந்நிலையில், புதூர் நாடு முதல் கம்பு குடி கிராமம் வரை உள்ள 15 கி.மீட்டருக்கு சாலை அமைக்க வனத்துறை அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து நிதி ஒதுக்கிய மாவட்ட நிர்வாகம், ஆரம்ப கட்டப் பணிகளை தொடங்கியது. சாலை வசதியின்றி அவதிப்பட்டு வரும் 18 கிராம மலைவாழ் மக்களும் வாலி பர் சங்க கிளை தலைவர் எஸ்.கோவிந்த ராஜ், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.தியாக மூர்த்தி, கே.வெங்கடேசன், தாலுகா நிர்வாகி கள் ஏ.காளியப்பன், ஆர்.ஜெகநாதன், ஜி.நித்தியானந்தன் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.