திருநெல்வேலி,டிச.23- நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்றான மணிமுத்தாறு அணை மொத்தம் 118 அடி கொள்ளளவு கொண்டது ஆகும். இந்த அணையில் திங்கட்கிழமை நிலவரப்படி 100.82 அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
இந்நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் `கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டுக்கான முன்னுரிமை பகுதியான 3 மற்றும் 4-வது ரீச்சுகளில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சபாநாயகர் அப்பாவு, ராபர்ட் புரூஸ் எம்.பி., முன் னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ. க்கள் அப்துல் வஹாப், ரூபி மனோ கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்புற வளர்ச்சி துறை அமைச்சரும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்ச ருமான கே.என்.நேரு கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
இந்த தண்ணீர் மூலம் 12 ஆயிரத்து 18 ஏக்கர் விளைநிலங்கள் மறைமுகமாக பாசன வசதி பெறுகிறது. திங்கட்கிழமை முதல் வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரை 99 நாட்களுக்கு தண்ணீர் இருப்பை பொறுத்து பிரதான கால்வாயில் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படு கிறது. இதன் மூலமாக நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, திசையன்விளை வட்டங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், ஏரல், ஸ்ரீவைகுண்டம் வட்டங்களும் என அதில் மொத்தம் உள்ள கிராமங்களில் விவசாய நிலங்கள் பயன் பெறுகிறது.
இந்த தண்ணீர் 46 கிலோ மீட்டர் பயணித்து 3-வது ரீச்சில் 97 குளங்களையும், 4-வது ரீச்சில் 79 குளங்க ளையும் நிரம்ப செய்கிறது. இந்த தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் அர்பித் ஜெயின், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பொதுப் பணித்துறை கண்காணிப்பு பொறி யாளர். சி வ க் மார்,வேளாண்மை துணை இயக்குனர் கற்பகராஜ். அம்பாசமுத்திரம் யூனியன் சேர்மன் பரணி சேகர். கல்லி டைக்குறிச்சி நகர பஞ்சாயத்து துணை தலைவர் இசக்கி பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.