districts

பஹ்ரைன் சிறையில் இருந்து இடிந்தகரை மீனவர்கள் டிச .10 ல் விடுவிப்பு ராபர்ட் புரூஸ் எம்.பி.க்கு, ஒன்றிய அமைச்சர் கடிதம்

திருநெல்வேலி, டிச. 7- நெல்லை நாடா ளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூசுக்கு, ஒன்றிய வெளியு றவுத்துறை அமைச்சர் கடிதம் அனுப்பி யுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் இடிந்தகரை பகுதியில் இருந்து மீனவர்கள் 28 பேர் பஹ்ரைன் கடற்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த நாட்டு போலீசார் அவர்களை சட்ட விரோத மாக நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்டதாக கடந்த செப்டம்பர் 20ஆம்  தேதி என்னிடம் தகவல் கொடுத்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க நீங்கள் வலியுறுத்தி இருந்தீர்கள்.

அதன்படி எடுத்த நடவடிக்கையின் பேரில் 28 இந்திய மீனவர்களும் வருகிற டிசம்பர் 10ஆம் தேதி பக்ரைன் அதிகாரிகளால் விடுவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,மேலும் தாயகம் திரும்புதல் தொடர்பான சம்பிரதா யங்களை முடித்த பிறகு அவர்கள் இந்தியா திரும்புவார்கள். தூதரகம் சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும். மேலும் அவர்கள் முன்கூட்டியே திரும்பு வதற்கு வசதியாக முன்னு ரிமையின் அடிப்படையில் உள்ளூர் அதிகாரிகளுடன் திருப்பி அனுப்பும் செயல் முறை நிறைவு செய்யப்படும்.  

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.