districts

img

பாபநாசம் பேருந்து நிலையத்திற்கு உ.வே.சா. பெயர் சூட்டக் கோரிக்கை

பாபநாசம், டிச.22 - தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் நினைவாக, பாபநாசம் புதிய  பேருந்து நிலையத்திற்கு அவரது பெயரைச் சூட்டவும், முகப்பில் அவரது சிலையை நிறுவவும் தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை  விடுத்துள்ளனர். உத்தமதானபுரத்தில் 1855 ஆம் ஆண்டு பிறந்த உ.வே.சா.,  தமிழ் இலக்கியங்களை ஓலைச் சுவடிகளிலிருந்து கண்டெடுத்து பதிப்பித்த  பெருமைக்குரியவர். அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நினைவு  இல்லம் திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.25 லட்சத்தில் புனரமைக்கப்பட்டுள்ளது.