districts

நெல்லை -மும்பை இடையே புதிய ரயில் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி வழியாக இயக்க கோரிக்கை

திருநெல்வேலி, டிச.23- மும்பை தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை புறக்கணி த்து, தமிழ்நாடு மக்களை அவம தித்து வரும் மத்திய இரயில்வே மற்றும் ரயில்வே போர்டு  நிர்வா கத்தைக் கண்டித்து கண்டன ஆர்பா ட்டத்திற்கான ஆலோசனை கூட்டம்  மும்பை தாராவி காமராஜர் தமிழ் பள்ளியில் மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதியை சார்ந்த அமைப்புகள், கட்சிகள், பிரமுகர்கள் என நூற்றுக்குமேற்பட்ட மக்கள் வந்து கலந்துக்கொண்டனர்.

குறிப்பாக மும்பை தமிழ் ரயில் பயணிகள் சங்க பொதுச்செயலாளர் அப்பாதுரை, ஆலோசகர் அசோக் குமார்;  காங்கி ரஸ் கட்சியை சார்ந்த வடிவேல் மற்றும் அமரன், வனிதா; ஆதி மூலம், காந்தி, சமூக ஆர்வலர் கொடி,  தாராவி உணவு உற்பத்தி யாளர் சங்கம் ராஜாமணி ; Omtex Classes ஜின்னா ;சமூக சேவகர் சார்லஸ்;  சமூக சேவகர் கஜேந்தி ரன், ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியர் மணி; கல்லிடைக்குறிச்சி ரயில் பய ணிகள் சங்கம் அபுல் ஹசன்;  இன்னும் கட்சி ,அமைப்பு சாராத பெண்கள், இளைஞர்கள், பெரிய வர்கள், பொது மக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் ரயில் பயணங்களில் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பட்டியலிட்டனர். பெரியவர்கள் விவரம் தெரிந்த வர்கள் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என ஆலோசனை வழங்கினர். குறிப் பாக நாங்குநேரி, உளுந்தூர் பேட்டையில் மும்பை தமிழ்நாடு ரயில் நிறுத்த வேண்டும். விழுப்புரம், விருத்தாசலத்தில் கூடுதல் நிமிடம் நிற்க வேண்டும். தென்மாவட்டங்களான தென்காசி, அம்பை, கல்லிடைகுறிச்சு வழியில் புதிய ரயில். வேண்டும்.

சங்கரன்கோ வில் ராஜபாளையம் வழி ரயில் வேண்டும்;  பாலக்காடு,  ஈரோடு, சேலம், கரூர், தஞ்சாவூர் புதுக் கோட்டை வழி ரயில் வேண்டும்.  கூடுதலாக நெல்லை ,கன்னியாகும ரிக்கு கூடுதல் ரயில் விட வேண்டும்,  ராமேஸ்வரத்திற்கு ரயில் வேண்டும் மும்பை தாதர் -பாண்டிச்சேரி ரயிலை வாரம் 7 நாட்கள் விட வேண்டும்; மும்பை -நெல்லை -நாகர்கோயிலுக்கு வாரம் 7 நாட்கள் ரயில் விட வேண்டும்;  மும்பை -சென்னை ரயிலை நெல்லை தென்காசி வரை நீடிக்க வேண்டும் ; மும்பை நாகர்கோயில் அடிப்படை பிரச்சனைகளை சரிசெய்வது இரவு 11 மணிக்கு மாற்றி இயக்க வேண்டும்;  தாராவியில் ரயில் நிலை யம் அமைப்பது ; வந்தே பாரத்,  கரிப் ரத் போன்ற அதிகவேக ரயிலை இயக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகள் கூடுத லாக வந்தவர்கள் வைத்தனர்.  இது முதல் ஆலோசனை கூட்டம் தான் தொடர்ந்து பல்வேறு பகுதி யில் ஆலோசனை கூட்டம் நடை பெறும்.  பின்னர் அனைவரின் ஆலோ சனை கேட்டபின்பு போராட்ட தேதி அறிவிக்கப்படும். நிகழ்வு க்கு வராத சங்கங்கள், கட்சிகள்,  அமைப்பு நிர்வாகிகள் போராட் டத்திற்கு தங்கள் ஆதரவை தெரி வித்துள்ளனர்.  

பலர் சபரிமலை பூசை, கிறிஸ்து மஸ் சர்ச் நிகழ்வு, பல சங்கங்கள், ஊர் கூட்டம் இருந்ததால் வர இயல வில்லை என தங்களது கருத்தை  பதிவு செய்தனர்.  வரமுடியாத சூழலிலும் தங்கள் கோரிக்கைக ளையும் சேர்த்துக்கொள்ள குறுந்செய்தி மூலம் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வு மும்பை ரயில் பய ணிகள் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தமிழன் ஒருங்கிணைத்து நடத்தினர்.