திருநெல்வேலி, செப். 8- நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ மையத்தில் இருந்து விண் கலம் செலுத்துவதற்கான பரி சோதனை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
விண்வெளிக்கு மனிதர் களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் எஸ்.எம்.எஸ்.டி.எம். (SMSDM) என்ற என்ஜின் சோதனை பல் வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.
அதன்படி 5-ஆவது கட்ட மாக 1700 வினாடிகள் சோத னை நடத்த இஸ்ரோ திட்ட மிட்டது. அதற்கான கவுண்ட வுன் ஆரம்பிக்கப்பட்டு சோத னை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது. இதனை மகேந் திரகிரி இஸ்ரோ மைய இயக்குநர் ஆசீர் பாக்யராஜ் நேரில் பார்வையிட்டார். மேலும் திருவனந்தபுரம் திட்ட மைய இயக்குநர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குனர் மோகன் ஆகியோர் காணொலி காட்சி மூலமாக பார்வையிட்டனர்.