நெல்லை, அக். 1 - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதி களில் இடநெருக்கடி குறித்து ஆய்வு செய்ய ஆதிதிராவிட நல இயக்குநரகம் உத்தர விட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் 11 வரை நடைபெறும்
இந்த ஆய்வில், மாவட்ட அலுவலர்கள் மற்றும் விடுதி காப்பாளர்கள் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினமும் 4 மாவட்டங்கள் வீதம் ஆய்வு நடத்தப்படும்.