திருநெல்வேலி, நவ.6- திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற் கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் மணி கண்டன் (40). பாத்திர வியாபாரியான இவரது மூத்த மகள் முத்துலட்சுமி (19) களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு படித்து முடித்து நீட் தேர்வு எழுதுவதற்காக நெல்லையில் உள்ள தனியார் பயிற்சி மையம் ஒன்றில் பயின்று வந்துள்ளார்.
இந்த நிலையில், நீட் தேர்வின் முதல் முயற்சியில் வெற்றி பெறாத முத்து லட்சுமி, இரண்டாவது முறையாகவும் இந்த ஆண்டு வேறொரு பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக முத்துலட்சுமி பயிற்சி மையத்திற்கு செல்ல விருப்பம் இல்லாமல் இருந்த தாகக் கூறப்படுகிறது. மேலும், பயிற்சி மையத்திற்கு சென்று படித்து தேர்வில் வெற்றி பெறும்படி மாணவிக்கு பெற்றோர் அறிவுறுத்திய தாகவும், ஆனால், தொடர்ந்து மன உளைச்சலில் அவர் இருந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், புதனன்று (நவ.6) காலை மணிகண்டன் வியாபாரத்திற்காக வெளியூர் சென்றபோது, வீட்டில் உள்ள அறையில் இருந்த மாணவி முத்து லட்சுமி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த அவரது தாயார் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் முத்துலட்சுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாங்குநேரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு முத்துலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த காவல்துறை யினர், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு கொண்டுவந்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவ, மாணவியர்களின் மருத்து வக்கனவை சிதைத்து, அவர்களின் உயிர்களை காவு வாங்கும் ஒன்றிய அரசின் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகள்,மாணவர் சங்கங்கள் போராடி வருகின்றன. ஆனால் ஒன்றிய பாஜக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. நீட் தேர்வுக்கு பலியாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதி கரிக்கும் சோகநிகழ்வுதான் நடந்து வருகிறது.