districts

கேரள மருத்துவக் கழிவுகள் 2வது நாளாக அகற்றம்

நெல்லை அருகே   திங்கட்கிழமை யன்று 2ஆவதுநாளாக பழவூர், கொண்டா நகரத்தில் கேரளா மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு டாரஸ் லாரிகளில் ஏற்றப்பட்டன.

நெல்லையை அடுத்த கோடகநல்லூர் தனியார் தோட்டப்பகுதி, அரசு புறம்போக்கு நிலம்,வருவாய்த்துறை ஊழியரின் நிலத்தில் கேரள மருத்து வக் கழிவுகள் மூட்டை மூட்டை யாக கொட்டப் பட்டிருந்தன. இந்தக் கழிவு களை கேரளாவுக்கு எடுத்துச் செல்லும்படி பசுமை தீர்ப் பாயம் உத்தரவிட்டதின் பேரில் மருத்துவக் கழிவுகளை அகற்றும் நிறு வனத்தினர் ஏற்பாட்டில், கேரளாவில் இருந்து வந்த 16 டாரஸ் லாரிகளில், 8 பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றப் பட்டு கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில்  திங்கட்கிழமை அன்று 2 வது நாளாக பழவூரில் 4 டாரஸ் லாரி களில் 2 ஜேசி பிக்கள் மூலமும், கொண் டாநகரத்தில் 2 டாரஸ் லாரிகளில் ஒரு ஜேசிபி மூலமும் மருத்துவக் கழிவுகள்  அகற்றப்பட்டு, ஏற்றப்பட்டன. கொண்டா நகரத்திற்கு மேலும் 2 லாரிகள் மருத்துவ கழிவுகளை அகற்ற வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.