districts

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாடு! தூத்துக்குடியில் எழுச்சியுடன் துவங்கியது

தூத்துக்குடி, டிச. 13 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15-ஆவது மாநில மாநாடு  தூத்துக்குடியில் தோழர் நா. முனி யாண்டிசாமி அரங்கத்தில் (மாணிக்க மஹால்)வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) அன்று துவங்கியது

முதலாவதாக, தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலையிலிருந்து மாநாட்டு அரங்கம் வரை மாநில பிரதிநிதிகள் பேரணி நடை பெற்றது. இப்பேரணியை சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச்செய லாளர் தெ. வாசுகி கொடியசைத்து துவக்கி வைத்தார். 

சங்க கொடியேற்று மற்றும்  அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளுக்கு பிறகு, நடைபெற்ற பொது அமர்விற்கு மாநிலத் தலைவர் (பொ) சா. டானியல் ஜெயசிங் தலைமை வகித்தார். சிஐடியு அகில இந்தியச் செயலாளர் இரா. கருமலையான் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார்.

மாநிலத் துணைத்தலைவர் சி.எஸ். கிறிஸ்டோபர் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் ஞா. ஞானராஜ் வரவேற்புரையாற்றினார். ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல. சீதரன், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க செயலாளர் கு. வெங்கடேசன் மற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ச. மயில் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநில மாநாட்டு சிறப்பு மலரை, அரசு ஊழியர் சங்கத்தின் மாநில முன்னாள் துணைத்தலைவர் எஸ். ஆறுமுகம் வெளியிட மாநில முன்னாள் துணைத் தலைவர் இரா.  பீட்டர் பர்னபாஸ், மாவட்ட முன்னாள் தலைவர் ப. திரவியம், சிஐடியு மாநிலச் செயலாளர் ஆர். ரசல், மாவட்ட முன்னாள் தலைவர் அல் போன்ஸ் லிகோரி, ஏஐஎப்யூசிடிஓ தேசியத் தலைவர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற மாநில பிரதிநிதித்துவ பேரவைக்கு மாநிலத் தலைவர் சா. டானியல் ஜெயசிங் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ஆ. செல்வம் வேலை மற்றும் ஸ்தாபன அறிக்கையையும், மாநிலப் பொரு ளாளர் மு. பாஸ்கரன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தொடர்ந்து அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

மகளிர் அமர்வில் மாநில துணைத்தலைவரும்- மாநில மகளிர் துணைக்குழு அமைப்பாளருமான சி.பரமேஸ்வரி மகளிர் அமர்வு அறிக்கை சமர்ப்பித்தார். பாரதி தாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை பேராசிரியர் சுபா உரையாற்றி னார். மாநில நிர்வாகிகள் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மகளிர் துணைக் குழு தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் ஜே. உமாதேவி நன்றியுரை ஆற்றினார். தொடர்ந்து சனிக்கிழமையன்றும் மாநாடு நடைபெறுகிறது.