தூத்துக்குடி, ஜூன் 25- சாதாரண மக்களை பாதிக்கும் இணைப்பு ரயில் திட்டத்தை கை விட்டு, மீண்டும் லிங்க் எக்ஸ் பிரஸை இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வேக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மாசிலா மணிபுரம் சிபிஎம் மாநகர் செயலா ளர் தா.ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘நாகர்கோவில் - கோவை ரயிலில் தூத்துக்குடி மக்களுக்காக இயக்கப்பட்டு வந்த லிங்க் எக்ஸ் பிரஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. தற்பொழுது அந்த லிங்க் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப் பட்டுள்ளது. ஜூலை 2 முதல் லிங்க் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டு, இணைப்பு ரயில் விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இணைப்பு ரயிலில் நள்ளிரவு மணியாச்சி சென்று கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இரவு 11.30 மணிக்கு ஏறவேண்டும். கோவையிலிருந்து - தூத்துக்குடிக்கு வரும் பயணி கள் அதிகாலை 2.40 மணிக்கு மணி யாச்சியில் இறங்கி தூத்துக்குடி இணைப்பு ரயிலுக்கு மாற வேண்டும். தூத்துக்குடி-கோவை லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்ட பொழுது முன்பதிவு இல்லாத பெட்டிகளில் சுமார் 300 பேர் வரை தினசரி பயணம் செய்தனர். இணைப்பு ரயிலில் செல்லும் முன் பதிவு இல்லாமல் செல்லும் பயணிகளுக்கு நாகர் கோவில்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன் பதிவு இல்லா பெட்டிகளில் இடம் எப்படி கிடைக்கும். இடம் இல்லாத நிலை யில் அவர்கள் நள்ளிரவில் தூத்துக் குடி திரும்ப என்ன செய்வார்கள். எனவே, சாதாரண மக்களை பாதிக்கும் இந்த இணைப்பு ரயில் திட்டத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் கைவிட்டு, மீண்டும் லிங்க் எக்ஸ்பிரஸை இயக்க வேண்டும். அல்லது தூத்துக்குடி - கோயம் புத்தூர் புதிய ரயில் இயக்க வேண்டும். தெற்கு ரயில்வேயின் தூத்துக் குடி நகர மக்கள் விரோத போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கா விட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்’’ என கூறியுள்ளார்.