districts

விபத்தில் இறந்த நபர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியுதவி : ஆட்சியர் வழங்கினார்

தூத்துக்குடி,டிச.23  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விபத்தில் இறந்த வர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசின் நிவாரண நிதி யுதவியை மாவட்ட ஆட்சியர்  க.இளம்பகவத், பயனாளிக ளுக்கு வழங்கினார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில், மாவட்ட ஆட்சியர்  க.இளம்பகவத், தலைமை யில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம்  நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கல்வி உதவித்  தொகை, இலவச வீட்டும னைப்பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உத வித்தொகை, விதவை உத வித்தொகை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 467 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.  பெறப்பட்ட கோ ரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளு மாறு துறைசார்ந்த அலுவ லர்களுக்கு மாவட்ட ஆட்சி யர் அறிவுறுத்தினார்.

முன்ன தாக, மாற்றுத்திறனாளி களை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 18 மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்க ளின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.   இக்கூட்டத்தில் தூத்துக் குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் இறந்த நபர்களின் குடும்பத்தின ருக்கு தமிழ்நாடு முதல மைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.3 இலட்சத்திற்கான காசோ லையினை மாவட்ட ஆட்சி யர் க.இளம்பகவத் பயனாளி களுக்கு வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் நல அலு வலர் விக்னேஷ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாய கம் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.