தூத்துக்குடி, டிச. 14 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15-ஆவது மாநில மாநாடு தூத்துக்குடி யில் தோழர் நா. முனியாண்டிசாமி அரங்கில் (மாணிக்க மஹால்) வெள் ளிக்கிழமை (டிசம்பர் 13) அன்று துவங்கியது.
முதல் நாளில் பொது அமர்வு, பிரதி நிதித்துவப் பேரணி, கொடியேற்றம், தியாகிகளுக்கு அஞ்சலி, மாநாட்டு மலர் வெளியிடுதல், மாநிலப் பிரதி நிதித்துவப் பேரவை, வேலை - ஸ்தா பன அறிக்கை, மகளிர் அமர்வு அறிக்கை, கருத்தரங்கம், தீர்மானங்கள் முன் மொழிதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடை பெற்றன.
இரண்டாவது நாளான சனிக்கிழ மையன்று பிரதிநிதிகள் அமர்வு மற்றும் பொது மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி கள் கலந்து கொண்டனர். பொதுச் செய லாளர் மற்றும் பொருளாளர் வைத்த அறிக்கைகள் மீது விவாதங்கள் நடை பெற்றன. அதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கான மாநில நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
பொது மாநாட்டிற்கு மாநிலப் பொருளாளர் டானியன் ஜெய சிங் தலைமை வகித்தார். வரவேற்புக் குழு செயலாளர் தே. முருகன் வர வேற்புரை ஆற்றினார். அகில இந்திய அரசு ஊழியர் சங்க பொதுச்செயலா ளர் ஸ்ரீகுமார் நிறைவுரை ஆற்றினார். முன்னாள் பொது செயலாளர் ஆ. செல்வம் அறைகூவல் தீர்மான விளக்க வுரை ஆற்றினார். மாநில முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ந. வெங்கடேசன் நன்றி கூறினார்.
அரசு ஊழியர்களின் பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் பெற்றிடவும், இருக்கும் உரிமைகளை தக்க வைத் துக் கொள்ளவும், தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தவும் போராட்டங் கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தீர்மானங்கள்
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; 21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப் பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊர்ப்புற நூல கர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பு ஊதியம், மதிப்பூதியம் பெறும் மூன்று லட்சம் பணியாளர் களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியமும் ஓய்வூதியமும் வழங்கிட வேண்டும், சாலை பணியா ளர்களின் 41 மாத பணிநீக்க காலத் தைப் பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்து ணவு மையங்கள் மூலமாக சத்து ணவு ஊழியர்களை கொண்டு அமல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
போராட்ட அறிவிப்பு
மேலும், இக்கோரிக்கைகளை முன்வைத்து, 2024 டிசம்பர் 27 அன்று அனைத்து அலுவலகங்கள் முன்பும் தமிழக அரசின் மவுனம் கலைக்கும் ஆர்ப்பாட்டம், 2025 ஜன வரி 6 முதல் 10 வரை உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் மற்றும் பிரச்சார இயக்கம், 2025 பிப்ரவரி 10 அன்று மாவட்டத் தலைநகரங்களில் 24 மணி நேர தர்ணா போராட்டம், பிப்ரவரி 25 அன்று ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம், ஜூன் மாதத்தில் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட் டம் உள்ளிட்ட தீவிரமான போராட்ட நட வடிக்கைகளை முன்னெடுப்பதென் றும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
\தமிழ்நாடு அர ஊழியர் சங்க மாநில மாநாட்டில் சங்கத்தின் புதிய மாநிலத் தலைவராக மு. பாஸ்கரன், மாநிலப் பொதுச்செயலாளராக மு.சீனிவாசன், மாநிலப் பொருளாளராக டானியல் ஜெயசிங் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலத் துணைத் தலைவர்களாக ஸ்ரீபரமேஸ்வரி, தே. வாசுகி, அம்சராஜ், செல்வராணி, முருகன், தினேஷ், துணைப் பொதுச்செயலாளர்களாக சோமசுந்தரம், அண்ணா, குபேரன், மகாலிங்கம், ரங்கசாமி, மாநிலச் செயலாளர்களாக ஜெசி, மைக்கேல், லில்லி புஷ்பம், வளர்மாலா, விஜயகுமாரன், பிரகாஷ், நீதி ராஜா, மாநிலத் தணிக்கையாளர்களாக முபாரக் அலி,
விக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.