தூத்துக்குடி, டிச.17 தமிழக கடலோரப் பகுதிகளில் சூறா வளிக் காற்று வீசக்கூடும் என்பதால் தூத்துக் குடி மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி யால், தெற்கு வங்கக் கடல் மத்திய பகுதி களில் காற்றழுத்த தாழ்வு பகுதி திங்கள் கிழமை உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாள்களில் வலுப்பெற்று மேற்கு - வட மேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதி களை நோக்கி நகரக்கூடும். இதனால், தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, தூத்துக்குடி மீனவர்கள் செவ்வா யன்று முதல் (டிச.17) மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர். மீன்வளத் துறையின் அறிவிப்பு கார ணமாக மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத் தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 300 விசைப்படகு களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடி துறைமுகங்களில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் பத்திரமாக இருக்கவும், அருகே உள்ள பாதுகாப்பான கடல் பகுதிகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.