தூத்துக்குடி,டிச.23 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஓட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சி லர் பு. சுப்பு லட்சுமி புவிராஜ் தொடர் முயற்சியால் கோவில்பட்டியில் இருந்து ஓட்டபிடாரம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாரம் கிரா மத்திற்கு அரசு பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்ட பிடாரம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளா ரம் கிராமத்தில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மக்கள் வேலை, கல்வி, நீதிமன்றம் உள்ளிட்ட தேவைகளுக்காக தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனர். எனவே வெள்ளாரம் கிராமத்திற்கு அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஓட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் சுப்பு லட்சுமி புவி ராஜ் சார்பில் அரசு போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குனர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பி னர் ஆகியோருக்கு தொடர்ந்து மனு அளித்தார்.
இது தொடர்பாக அப் பகுதி மக்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிலையில், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளாரம் கிராமத்தில் கோவில்பட்டி - எம். வெங்கடாசலபுரம் வரை வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வெள்ளாரம் வரை செல்வ தற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த பேருந்து சேவையை விளாத்தி குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஓட்டப் பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், ஓட்டப்பிடாரம் யூனியன் துணை சேர்மன் காசிவிஸ்வநாதன், சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் சுப்புலட்சுமி புவிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.