districts

img

தேனியில் தீக்கதிர் சந்தா முதல் தவணையாக ரூ 1.69 லட்சம்

தேனியில் கட்சியின் இடைக்குழு உறுப்பினர்களுக்கான பேரவை மாவட்ட  செயற்குழு உறுப்பினர் சி.முனீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் முதற்கட்டமாக தீக்கதிர் சந்தாதொகை 1 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் தீக்கதிர் முதன்மை பொதுமேலாளர் என்.பாண்டியிடம்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன் வழங்கினார். நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.முருகன், எம்.ராமச்சந்திரன், டி.கண்ணன், எஸ்.வெண்மணி மற்றும் இடைக்கமிட்டி செயலாளர்கள் கே.ஆர்.லெனின், கே.எஸ்.ஆறுமுகம், இ.தர்மர், பி.ஜெயராஜ், எஸ்.லட்சுமணன், டி.ராஜா, எம்.வி.முருகன், மா.தங்கராசு, ஆர்.போஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.