தேனி,செப்.21- பல தலைமுறைகளாக வாழும் பழங்குடி மக்கள் மற்றும் வன விவ சாயிகளை வெளியேற்றும் வகை யில் கொண்டுவந்துள்ள புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் மறு குடியமர்வு திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்
தமிழநாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் சங்கத்தின் மாநிலத் தலை வர் பெ.சண்முகம் உரையாற்றினார். அவர் பேசியதாவது:
தேனி மாவட்டத்தில் மேகமலை புலிகள் காப்பகத்தின் கீழ் வரும் 81 கிராமங்களில் சுமார் 4500 குடும்பங் களை சிறப்பு படை அமைத்து வெளி யேற்ற வேண்டும் என உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது .தேனி மாவட்ட நிர்வாகமும் விவசாயிகளை வெளியேற்றி மறுகுடியமர்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.விவசாயிகள் சங்கத்தின் தொடர் போராட்டம் காரணமாக இதுநிறுத்தி வைக்கப்பட்டது.
பல தலைமுறைகளாக வாழ்ந்து வருபவர்களுக்கு பட்டா வழங்காதது யார் தவறு? இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நான் உள்ளிட்ட விவ சாயிகள் சங்க தலைவர்கள் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலி யுறுத்தினோம். அவரும் ஏற்றுக் கொண்டார்.இதுவரை மேல்முறை யீடு செய்யவில்லை.
இந்நிலையில் மே, ஜூன் மாதங் களில் ஒன்றிய அரசின் வனம் - சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட் டில் உள்ள தேசிய புலிகள் பாது காப்பு ஆணையம் மாநில அரசு களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், புலிகள் சரணாலயத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை (பழங்குடி மக்கள் -விவசாயிகளை) வெளி யேற்றி மறு குடியமர்வு குறித்த திட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கடிதம் வன உரிமைச் சட்டத்திற்கு எதிரானது; சட்டவிரோதமானது. வன உரிமை சட்டம் வனவிலங்கு சரணாலயத்தில் வாழும் மக்களுக்கும் பொருந்தும். வனவிலங்குகளும் மனிதர்களும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற் பட்டால் அம்மக்களின் ஒத்து ழைப்புடன் தான் வெளியேற்ற முடி யும். தன்னிச்சையாக வெளியேற்ற முடியாது.
3 தலைமுறையாக வசிப்போருக்கு பட்டா வழங்கிடுக!
தமிழ்நாட்டில் உள்ள 5 புலிகள் சர ணாலயத்தில் 306 புலிகள் மட்டுமே உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் புலிகளால் தாக்கப் பட்டு 300 பேர் வரை பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் . இக்காலத்தில் 628 புலிகள் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் துறையின் அமைச்சர் பதிலளித்துள்ளார். இதை ஒரு விபத்தாக கருத வேண்டும். சாலை விபத்தில் ஆண்டிற்கு எவ்வ ளவு பேர் பலியாகிறார்கள் என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். வனவிலங்குகள் பாது காக்கப் பட வேண்டியவைதான்.
எனவே தேசிய புலிகள் பாது காப்பு ஆணையம் கொடுத்துள்ள கடிதத்தை திரும்பப்பெற வேண்டும். மக்களின் குடியுரிமை, வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் புலிகள் பாதுகாப்பு ஆணைய கடிதத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். அதுபோல மூன்று தலைமுறை யாக குடியிருந்து வருபவர்கள், விவ சாயம் செய்து வரும் அனை வருக்கும் பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.