districts

img

சுருளி அருவியில் நீர்வரத்து சீரானது

தேனி, டிச.17- தேனி மாவட்டத்தில் மழை இல்லாத நிலையில் நீர்வரத்து சீரானதைத் தொட ர்ந்து சுருளி அருவியில் குளிக்க செவ்வாய்க்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்  டுள்ளது.

இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். கம்பம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை யடிவாரத்தில் சுருளிஅருவி அமைந்துள்ளது. மேகமலை யில் உள்ள ஹைவேவிஸ், தூவானம் அணை நீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் அருவியின் நீராதாரமாக உள்ளது. சுருளி அருவியைப் பொறுத்தளவில் நீர்வரத் துக்கு ஏற்ப குளிக்க அனும திக்கப்படுவது வழக்கம்.  இந்நிலையில் தொடர் மழையால் கடந்த 13 ஆம்  தேதி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இத னைத் தொடர்ந்து அரு விக்குச் செல்ல தடை விதிக் கப்பட்டது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். தற்போது வெள்ளம் குறைந்து நீர்வரத்து சீராகி யுள்ளது. ஆகவே சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க் கிழமை முதல் குளிக்க அனு மதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் அருவியில் நீராடினர். கும்பக்கரையில் தடை தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் கும்  பக்கரை அருவியில் குளிக்க  வனத்துறையினர் தொட ர்ந்து தடை விதித்துள்ளனர்.