districts

img

தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலையும் ஆவின் மூலம் வாங்க திட்டம்

தேனி, ஜூலை 14- தேனி மாவட்டத்தில் பால்  உற்பத்தி, விற்பனை மற்றும்  கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் வளர்ச்சித் திட்டங்  கள் குறித்து தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்க ராஜ் தலைமையில் சனிக்கிழமை யன்று ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் ஷஜீ வனா முன்னிலையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த  இக்கூட்டத்தில் தேனி நாடாளு மன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல் வன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆண்டிபட்டி - மகாராஜன், பெரிய குளம் - சரவணக்குமார் உள்பட கால்நடைத்துறை அதிகாரிகள், மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பலர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேனி மாவட்ட ஆவின் மூலம் கடந்த 10 மாதங்க ளில் 15 ஆயிரம் லிட்டர் பால் அதி கரித்துள்ளது. அந்த இலக்கை அதி கரிக்க பல்வேறு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இது  தவிர கடந்த ஆண்டை விட இந்த  ஆண்டிலும் புதிதாக கால்நடைகள்  வாங்குவதற்கும் பராமரிப்பதற்கும் வழங்கப்படும்.

வட்டியில்லா கடன்கள் மற்றும் மானியங்கள் அதிகரிக்கப்படும். தேனி மாவட்டத்தில் குறைந்தபட் சம் 500 இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களை கண்ட றிந்து, சிறிய அளவிலான மாட்டுப்  பண்ணை ( மினி டெய்ரி ) அமைப்ப தற்கு வங்கிக்கடன் உதவி மற்றும் மானியங்கள் வழங்கி அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்ற  உள்ளோம், இதற்கான ஆலோச னைகள் இன்றைய கூட்டத்தில் அதி காரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்த சீசனிலும் நிரந்தரமான விலை  வழங்கும் ஆவினில் பால் உற்பத்தி யாளர்கள் உறுப்பினராக வேண்  டும், முதலமைச்சர் ஸ்டாலின் அறி வித்த 3 ரூபாய் ஊக்கத்தொகை பால் உற்பத்தியாளர்களுக்கு உதவியாக இருக்கிறது. அதே போல விவசாயிகள் இருப்பிடத்தி லேயே பாலின் தரத்தை சோதனை  செய்து அதற்கேற்ப மேலும் விலை  அதிகரித்து வழங்கப்படும் திட்டம்  தமிழகத்தில் அறிமுகப்படுத்தப் பட்டு விவசாயிகளிடம் நல்ல வர வேற்பைப் பெற்றுள்ளது. இது தவிர  மானியங்களுடன் கூடிய கால்நடை  காப்பீடு 85 சதவீத விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை நூறு சதவீதமாக மாற்றுவதற்கு விவ சாயிகள் முன் வந்து கால்நடை காப்பீடு செய்து கொள்ள வேண்டும். 

தமிழகத்தில் இருந்து கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்  கானா உள்ளிட்ட அண்டை மாநி லங்களுக்கு பால் ஏற்றுமதி  செய்வதை ஒழுங்குமுறைப்படுத் தப்படுமா என முயற்சி செய்து வரு கிறோம். தமிழகத்தில் நாளொன் றுக்கு சுமார் 2.25 கோடி லிட்டர் பால்  உற்பத்தியாகிறது. இதில் 40 சத வீதம் உற்பத்தியாளர்கள் பயன் பாடு போக எஞ்சிய அளவு பால்  தான், விற்பனைக்கு அனுப்பப்படு கிறது. இதில் 36 லட்சம் லிட்டர்  பால் மட்டும் தான் ஆவின் மூலம்  கொள்முதல் செய்யப்படுகிறது.‌ மீதம் தனியார் நிறுவனங்கள் மூலம்  விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் அரசே ஆவின்  மூலம் கொள்முதல் செய்து அதனை நமது மாநில பயன்பாடு போக எஞ்சியதை வெளி மாநி லத்திற்கு அனுப்ப முடியுமா என்பது  குறித்து ஆலோசனை நடத்தி வரு கிறோம்.

மலை மாடுகளை காப்பாற்ற...

அழியும் விழிம்பில் உள்ள மலை மாடுகளை காப்பாற்ற வனத்  துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு  நடவடிக்கை எடுக்க அரசு தயா ராக உள்ளது. மலைமாடுகள் விஷ யத்தை சாதாரணமாக கையாள முடியாது. வனத்துறை சட்டப்படி தான் மலைமாடுகளை வளர்க்க வேண்டிய நிலை உள்ளது. வனத்  துறையிடம் பேசி, மலை மாடு கள் வளர்க்கும் விவசாயிகளின் நலன் கருதி, வனத்துறையின் கெடு பிடிகளை தளர்த்தி அவர்களுக்கு உதவச் சொல்லலாம்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

மதுரை ஆவினில் அமைச்சர் ஆய்வு

மதுரை, ஜூலை 13- மதுரை ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஜூலை 13 சனிக்கிழமையன்று பால்வளத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரி விக்கையில், மதுரை மாவட்டத்தில் சென்ற ஆண்டு  கொள்முதல் செய்யப்பட்ட பால் நாளொன்றிற்கு சரா சரியாக 1 லட்சத்து 20 ஆயிரமாக இருந்ததை, ஓராண்டு காலத்தில் 1 இலட்சத்து 70 ஆயிரமாக  எட்டியுள்ளது. வருகின்ற காலத்தில் கொள்முதல் 1 லட்சத்து 70 ஆயிரம் என்பது 2 லட்சத்தை எட்டி விடும் அளவிற்கு ஆவின் நிறுவனமானது வளர்ச்சி அடைந்து வருகிறது. கால்நடை வளர்ப்பவர்கள் அந்  தந்த பகுதியில் இருக்கக்கூடிய பிரதம பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்து கொள்ள  வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரி வித்தார். 

மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்ட ஒன்றி யங்களின் பால் உற்பத்தி, பால் விற்பனை மற்றும்  ஒன்றியங்களின் வளரச்சி திட்டங்கள் குறித்து துறை  அலுவலர்கள் மற்றும் ஒன்றிய அலுவலர்களுடன் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, மதுரை ஆவின் பொது  மேலாளர் ஆ.சிவகாமி அவர்கள் உட்பட மதுரை,  விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களைச் சார்ந்த  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.