districts

img

தனியார் வழங்கிய விளையாத விதை நெல்லால் 300 விவசாயிகள் பாதிப்பு நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்

தேனி, பிப்.25- தேனி மாவட்டம், சின்ன மனூர் அருகே மார்க்கை யன்கோட்டை குச்சனூர் பகு திகளில் தனியார் விற்பனை செய்த 606-விதைநெல்லால் விளைச்சல் இல்லாததால் பாதிப்படைந்த விவசாயி களுக்கு நிவாரணம் கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மார்க் கையன்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏரியா தலைவர் என். நட ராஜன் தலைமை வகித்தார்.  மாநிலக்குழு உறுப்பினர் கே. ராஜப்பன் ,ஏரியா செய லாளர் எம். மணிகண்டன் விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு, சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.எஸ். ஆறுமுகம், மாவட்ட குழு  உறுப்பினர் என். அம்சமணி, விவசாயிகள் சங்க தலை வர் சேகர் மற்றும் திமுக, அதி முக, பாஜக கட்சியை சேர்ந்த  80-க்கும் மேற்பட்ட விவசாயி கள் கலந்து கொண்டனர். போலி நெல் விதையால் 300 விவசாயிகளின் 525 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டது குறிப்  பிடத்தக்கது.