districts

img

அரசுத் தேர்வு எழுதுபவர்களுக்கு அரிய வாய்ப்பு திண்ணையின் 23 வது பயிற்சி வகுப்பு துவக்கம்

தேனி, நவ.26- திண்ணையின் 23 வது பயிற்சி துவக்க விழாவில் குரூப் 2, 2A மற்றும் 4 பயிற்சி வகுப்புகளுக்கான என்.ஏ.கொண்டுராஜா நினைவு உயர்நிலைப் பள்ளியில் துவங்கப்பட்டது.  தொடக்க விழாவிற்கு திண்ணை மனித வள மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவர் பா.ராமமூர்த்தி  தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

திண்ணை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் யாகதேவன் வரவேற்று பேசினார். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக தேனி ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் எம்.தீபக், ரோட்டேரியன் ரெங்கராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக எழுத்தர் மு.ராமர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்  கோ.செந்தில்குமார்  தொகுத்து வழங்கினார். திண்ணை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்  யாகதேவன் வரவேற்று பேசினார்.

 நிகழ்வில் கடந்த குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 மாணவர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற பரணிதரண் ஆகியோர் பாராட்டு பெற்றனர். மக்கள் தொடர்பாளர் அ.சீனிவாசப்பெருமாள் நன்றி கூறினார். எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் குரூப் II, IIA, IV க்கான வாராந்திர வகுப்புகள் நடைபெற உள்ளன. பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் தேர்வாளர்கள் 99409 70325 எண்ணிற்கு தொடர்புக்கொள்ளலாம்.