districts

img

தேனியில் 387 சந்தா தொகை ரூ 5.32 லட்சம் அளிப்பு

தேனி.ஜூலை 24- தேனியில் தீக்கதிர் 387 சந்தாக்களுக் கான தொகை 5 லட்சத்து 32 ஆயிரத்து  800 ரூபாய்  தீக்கதிர் சிறப்பாசிரியர் மதுக்கூர் இராமலிங்கத்திடம்  வழங்கப் பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தேனி மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர்  சந்தா வழங்கும் விழா  தேனியில் திங்க ளன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணா மலை  தலைமை வகித்தார். மாநில  செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, தீக்கதிர் சிறப்பாசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் உரையாற்றி னர்.

நிறைவாக தேனி மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட ஓராண்டு 167, ஆறுமாதம்  189, மாதம் 31 என மொத்தம் 387  தீக்கதிர் சந்தாக்களுக்கான தொகை  ரூ.5,32,800 -ஐ மாநில செயற்குழு உறுப் பினர் மதுக்கூர் இராமலிங்கத்திடம்   மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன் வழங்கினார். நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், இடைக்கமிட்டி செயலா ளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.