districts

கோம்பையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள்-அழகிய மட்கலன்கள் கண்டெடுப்பு

தேனி, ஜூலை 9-  தேனி மாவட்டம் உத்தமபாளை யம் அருகேயுள்ள கோம்பையில் சமூக ஆர்வலர் பிரகாஷ் அளித்த தகவ லின்படி அதே ஊரைச் சேர்ந்த முத்த ழகு, பாஸ்கரன், நாகராஜ், குமரே சன் ஆகிய ஆசிரியர்களுடன் உத்த மபாளையம் கல்லூரியின் முன் னாள் பேராசிரியர் முனைவர் எஸ். வர்க்கீஸ், ஜெயராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பெருங்கற்காலத் தைச் சேர்ந்த மனிதர்கள் தங்களு டன் வாழ்ந்து  இறந்தவர்களை அடக்  கம் செய்ய பயன்படுத்திய முதுமக்  கள் தாழிகள் மற்றும் ஈமமட்கலன் களை கண்டறிந்துள்ளனர்.   இவை  சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு  மேற் பட்டவையாகவும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அலங்காரக் கோடுகளுடன் வடிவமைப்பு

இதுபற்றி அவர்கள் கூறியதாவது: 

கோம்பை ஊர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு பழமையான பல  வரலாற்றுச் சான்றுகளைப் பெற்  றுள்ளது.  இவ்வூரின் வடகிழக்கி லுள்ள சாலை மலை கரடு என்ற பெய ரில் அழைக்கப்படும் சிறு மலைப் பகுதியில் உள்ள விவசாய நிலம்  ஒன்றை சீர்படுத்தினர். அப்போது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த புதை விடமான கல்வட்டம் ஒன்றிலிருந்து  முதுமக்கள் தாழியின் உடைந்த பகு திகள், தாழியின் மேல்பகுதியில் வைக்கப்பயன்படுத்தப்படும் பெரிய பெரிய பலகைக் கற்கள் மற்றும் ஈம மட்கலன்கள்  வெளிவந்தன. முது மக்கள் தாழியின் கழுத்துப்பகுதி யில் கயிறு போன்று வடிவமைப்பு டைய அலங்காரக் கோடுகள் இருந்  தன.  அலை அலையான அலங்கார  வடிவமைப்புகளும், நெல்மணி அள வுள்ள கோடுகளாலும் அலங்காரங் கள் போடப்பட்டிருக்கின்றன. இவை  எல்லாம் தாழிகளை சுடுவதற்கு முன்பு  ஈரமாக இருக்கும் போதே போடப் பட்டவையாகும்.

முதுமக்கள் தாழியுடன் இறந்த வர்களின் தேவைக்காக அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட் களும் வைக்கப்படும்.   இங்கும் ஈம மட்கலன்களை கலயம், கூசா, தட்டு,  கிண்ணம், தண்ணீர் குவளை மற்றும்  சிறிய மூடி போன்ற மட்கலன்கள் உடையாமல் முழு வடிவத்துடன் கிடைத்துள்ளன.  இவற்றில் 14 செ.மீ  உயரமுடைய சிறிய கலயம் என பல்வேறு வடிவம் உயரத்திலும், அகலத்திலும் கிடைத்துள்ளன.   இந்த மட்கலன்களின் உடல் பகுதி  அகன்றும் வாய் மற்றும் அடிப்பகுதி  குறுகிய தோற்ற வடிவில் பார்ப்ப தற்கு மிக அழகாக காட்சியளிக்கின் றன. மட்கலன்களை தரையில் வைப்பதற்கு பயன்படுத்தப்படும் தாங்கிகள் மட்கலன்களுடன் இணைத்தே வட்ட வடிவில் தயாரிக்  கப்பட்டிருக்கின்றன.  இந்த மட்கலன்  கள் எல்லாம் வெளிப்புறம் சிவப்பாக வும், உட்புறம் கருப்பாகவும் உள்  ளன.  மண்ணிலிருந்து கிடைக்கும் காவி அல்லது சிவப்பு நிற வண்  ணத்தை மட்கலன்களை சுடுவதற்கு  முன்பு பூசப்படுவதால் பார்ப்பதற்கு  வழவழப்பான தோற்றத்தைத் தரும்.

மேலும் ஆய்வு நடத்த கோரிக்கை

இங்கு கிடைத்த இப்பொருட்கள்  மூலம் இப்பகுதியில் பல நூறு ஆண்  டுகளுக்கு முந்தைய மனிதன் நல்ல நாகரீகம், பண்பாடுகளை பெற்று வாழ்ந்துள்ளான்.  இவற்றுடன் அம்  மக்களின் பண்பட்ட வாழ்வியல் முறைகளையும் நன்கு எடுத்துரைக்  கும் வகையில் இம்மட்கலன்கள் உள்ளன. இப்பகுதி பெருங்கற்கால மக்கள் இனக்குழுவாக வாழ்ந்த வாழ்விடப் பகுதியாகவும் அவர்  களின் புதைகாடாகவும் இருந்துள் ளது என்பதும் அறிய வருகிறது. இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் மேற்கொண்டால் இது போல் இன்  னும் பல தொல்தடயங்கள் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.