districts

img

வாலிபர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட மாநாடு பேரணியுடன் துவங்கியது

குடவாசல், ஆக.4 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட 18 ஆவது மாநாட்டு பேரணி புதன்கிழமை மாலை நன்னிலம் ஒன்றியம், கீரனூர் சர்க்கரை ஆலை அருகில் இருந்து துவங்கியது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்ட மாபெரும் எழுச்சி பேரணி யில், சிலம்பாட்டத்துடன், பறையிசை அதிர, புரட்சிகர முழக்கத்தை, கொல்லுமாங்குடி கடைவீதி வழியாக வந்து, பேரளம் கடை வீதியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான மாநாட்டு அரங்கத்தை வந்தடைந்தது. மாநாட்டு பேரணியை சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் துவக்கி வைத்தார். வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.முகமது சலாவுதீன் தலைமை  வகித்தார். ஒன்றியச் செயலாளர் கே.எம்.பாலா முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட்ட  கவுன்சிலரும், வரவேற்பு குழுத் தலைவரு மான ஜெ.முகமது உதுமான் வரவேற்றார். வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா சிறப்புரையாற்றினார். முன்ன தாக மாநில துணை செயலாளர்கள் சி.பால  சந்திரபோஸ், ஏ.வி.சிங்காரவேலன், மாவட்ட  செயலாளர் கே.பி.ஜோதிபாசு ஆகியோர் உரையாற்றினர். அனைவருக்கும் வேலை கேட்டு நான்கு முனைகளிலிருந்து 3000 கி.மீட்டர் தூரம் எழுச்சி மிகுந்த சைக்கிள் பயணத்தில் கலந்து கொண்ட இளைஞர்களை பாராட்டி நினைவு  பரிசு வழங்கப்பட்டது. வாலிபர் சங்க ஒன்றியத்  தலைவர் எஸ்.சுரேந்தர் நன்றி கூறினார்.

சுடர் பயணம் 
இம்மாநாட்டில் ‘போதை கலாச்சாரத்தை தீயிட்டுக் கொளுத்துவோம்’ என்ற சூளுரை யோடு அப்பு (எ) தீபக்குமார் நினைவு சுடர்  பயணம் செவ்வாயன்று மாலை புலிவலம் கடைவீதியிலிருந்து புறப்பட்டது.  இந்தச் சுடர் பயணத்தை சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாக ராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பாலா,  மாவட்ட செயலாளர் கே.பி.ஜோதிபாசு மற்றும் சங்க நிர்வாகிகள் வேலவன், சுந்த ரய்யா, வானதீபன் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். மாதர் சங்கத்தினர் உள்பட  நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். புலிவலம் கடைவீதியிலிருந்து புறப்பட்ட  இந்த சுடர் பயணம், கொல்லுமாங்குடியில் நடைபெற்ற மாநாட்டுப் பேரணியுடன் இணைந் தது.