districts

img

மாஸ் கல்லூரியில் யோகா விழிப்புணர்வு

கும்பகோணம் டிச.18 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள கோவிலாச்சேரி மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் “வாழ்க்கையில் யோகாவின் இயல்புகள்” என்ற தலைப்பில் யோகா பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கர்நாடக மாநிலம் மைசூர் உடும்பேர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் நாயகா (28) என்ற யோகா பயிற்சியாளர், கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும், கல்லூரி மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி அளித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து “வாழ்க்கையில் யோகாவின் இயல்புகள்” என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை என்எஸ்எஸ் அலுவலர் இந்திரா செய்திருந்தார். வணிகவியல் துறைத்தலைவர் அறிவரசன் நன்றி கூறினார்.