districts

img

நிலங்களில் குடியிருப்போரிடம் அநியாய வாடகை வசூலிக்காதே! கோயில் நிலங்களில் குடியிருப்போர் வலியுறுத்தல்

கும்பகோணம், மே 22-  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில், திருநரையூர் பகுதியில் நாச்சியார் கோயில் சீனிவாச பெருமாள் கோயில், ராமநாதசாமி கோயில், திருநறையூர் சித்தநாத சுவாமி கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் பல தலைமுறையாக சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில், அறநிலையத் துறையினர் குடியிருப்பவர்களிடம் பல மடங்கு வாடகை உயர்த்தி நோட்டீஸ் அனுப்பியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் தொகையை கட்ட நிர்ப்பந்திக்கின்றது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்து வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில்  நாச்சியார் கோவிலில் தனியார் திருமண மண்டபத்தில் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.வாசுதேவன் தலை மை வகித்தார். பார்த்திபன் வரவே ற்றார். சிவராமலிங்கம் கண்ணன், மகாராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் சா.ஜீவபாரதி, மாவட்டச் செயலாளர் எம்.ராமு, மாவட்ட பொருளாளர் கொளஞ்சியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நாச்சியார் கோவில் திருநறையூர் பகுதி கோயில்கள் கோயில் இடங்களில் குடிப்பவர்களை அநியாய வாடகை உயர்வு மற்றும் பாக்கி என்ற பெயரில் லட்சக்கணக்கில் வசூல் செய்வதை தள்ளுபடி செய்ய வேண்டும் பரம்பரை பரம்பரையாக குடியிருக்கும் கோயில் நிலத்தை குடியிருப்பவர்களுக்கே கிரயம் செய்து பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.