கும்பகோணம், ஜூன் 30- தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவிடைமருதூர் பி.ராம மூர்த்தி நினைவரங்கத்தில் ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாங்குடி முருகேசன் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்டத் தலைவர் வி.கண்ணன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஜீவபாரதி, ஒன்றியச் செயலாளர் நாகேந்திரன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய விவசாய சங்க தலைவராக குமர குரு, செயலாளராக சுந்தர், பொருளாள ராக வீரமணி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். கூட்டத்தில், ஜூலை 9-ஆம் தேதி ஒரத்த நாடு நடைபெறும் தமிழ்நாடு விவசாய சங்க தஞ்சை மாவட்ட மாநாட்டில் 10 பேர் பிரதி நிதியாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.