கும்பகோணம், அக்.15 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருமங்கலக்குடி அஸ்-ஸலாம் பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரி யின் 9 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடை பெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் ஜமால் முகம்மது இப்ராஹீம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ராம்குமார் வரவேற்று பேசினார். கல்லூரியின் செயலா ளர் ஷாஜஹான் துவக்க உரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 439 இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். தலைமை அரசு கொறடா கோவி.செழியன் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக அளவில் மூன்றாம் இடம்பெற்ற முதுகலை உற்பத்தி பொறியி யல் பிரிவில் படித்த அஸ்-ஸலாம் கல்லூரி மாணவர் பழனிபாபாவை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினார்.