districts

ஆறுகளில் மணல் எடுக்கும் உரிமையை தனியார் நிறுவனத்திற்கு விட்டதை ரத்து செய்க! மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை

தஞ்சாவூர், மே 30-  ஆறுகளில் மணல் எடுக்கும் உரி மையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதை அரசு உடனடியாக ரத்து  செய்ய வேண்டும் என மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம்  (சிஐடியு) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டையில், மணல் மாட்டு வண்டி தொழிலா ளர்கள் சங்கம் (சிஐடியு) பேரவைக் கூட்டம் முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெய பால் சிறப்புரையாற்றினார்.  இதில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் எம்.செல்வம், ஒன்றியச்  செயலாளர் எஸ்.கந்தசாமி, ஓய்வூதியர்  சங்கம் ரெ.ஞானசூரியன், மாட்டு  வண்டித் தொழிலாளர் சங்க நிர்வாகி கள் பட்டுக்கோட்டை பொன்னுசாமி,  திருச்சிற்றம்பலம் செல்வம், ஊரணிபுரம்  திருப்பதி, வெட்டிக்காடு மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் 11 பேர் கொண்ட  ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. மேலும், குறிச்சி, ஈச்சன்விடுதி, தொக்கா லிக்காடு, சின்ன ஆவுடையார் கோயில், பெத்தனாட்சிவயல் ஆகிய இடங்களில்,  மாட்டுவண்டி தொழிலாளர்கள் பிழைப் பிற்காக மணல் குவாரியை உடனடியாக திறக்க வேண்டும். கனரக வாகனங்களில் தனியார் நிறுவனங்கள் மண் எடுக்க அனுமதிக்கக் கூடாது.  மணல் எடுக்கும் உரிமையை தனியா ருக்கு விட்டதை ரத்து செய்ய வேண்டும்.  மாட்டுவண்டிக்கு 25 கனஅடிக்கு கட்ட ணம் நிர்ணயம் செய்யப்பட்ட ரூ.700-ஐ,  மீண்டும் பழையபடி ரூ.224 ஆக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.