districts

திருஆரூரான் சர்க்கரை ஆலை பிரச்சனை ஒரு மாதத்தை நெருங்கும் போராட்டம்

பாபநாசம், டிச.27- தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே  உள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்  கரை ஆலையை கண்டித்து 25 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாயன்று நடந்த போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எஸ்.துரைராஜ் பங்கேற்றார்.  அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விவசாயிகள் ஆலைக்கு அனுப்பிய கரும்புக்கான பணத்தையும், அவர்களது பெயரில் ஆலை உரிமையாளர் வாங்கிய பல நூறு கோடி கடனையும் திரும்பி செலுத்தவில்லை. இது தொடர்பாக விவசாயிகளுக்கு வங்கிகளிலிருந்து நோட்டீஸ் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து அனைவரிடமும் முறையிட்டும் நட வடிக்கை மேற்கொள்ளாததால், விவ சாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.  ஆனால் இதுவரை தமிழக அரசு இதில் தலையிடவில்லை. இங்கு போராடி வரும்  விவசாயிகளை ஏமாற்றியவர்களை பற்றி  அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் மீது எந்தவித குற்ற நடவடிக்கையும் மேற்  கொள்ளவில்லை. அனைத்து ஆதாரங்க ளும் இருந்தும் நடவடிக்கை மேற்கொள்ளா தது சரியல்ல” என்றார்.