districts

img

தொடர் மழை: கோனக்கடுங்கலாற்றில் உடைப்பு ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை, நெற்பயிர்கள் சேதம்

தஞ்சாவூர், டிச.14-  தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டு ப்பள்ளி நேமம்  பகுதியில் காவிரி ஆற்றில்  இருந்து கோனக்கடுங்கா லாறு பிரிந்து, அம்மன் பேட்டையில் வெட்டாற்றில்  கலக்கிறது. வடிகாலாகவும், பாசன வாய்க்காலாகவும் இந்த ஆறு திகழ்கிறது. இதன் மூலம் ஆயிரம் ஏக்க ருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், கோனக்கடுங் கலாற்றில், ஆகாயத் தாமரை கொடி அதிகளவில் படர்ந்து இருந்ததால், மழை  நீர் சீராக செல்ல முடியாமல் தண்ணீர் கரையை தொட்டுச் சென்றது. 

அதிகளவு தண்ணீர் செல்ல முடியாத நிலையில்,  வரகூர் பகுதி ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர்  வயலுக்குள் புகுந்தது. இத னால், வயல்கள் ஏரி போல் மாறின. நடவு செய்யப்பட்ட நெற் பயிர்கள், வாழைப் பயிர்கள் சுமார் ஆயிரக்கணக் கான ஏக்கரில் நீரில் மூழ்கி யுள்ளன. மேலும், ஆற்றில் ஏற்பட்ட உடைப்பால் வரகூர், கோனேரிராஜபுரம், கருப்பூர், ஐம்பதுமேல் நகரம், செந்தலை உள் ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட  கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “கோனக்கடுங்கலாற்றில் ஆண்டுதோறும் தூர்வாரும் பணிகள் நடந்து கொண்டு தான் உள்ளது. ஆனால் பெயரளவிற்கு தூர்வாரிய தால், ஆகாயத்தாமரைகள் மண்டின. இதுகுறித்து அரசு அலுவலர்கள் கவனத் திற்கு கொண்டு சென்றும்,  அவர்கள் கண்டு கொள்ள வில்லை. இதனால் உடைப்பு ஏற்பட்டு பாதிப்பை  சந்தித்துள்ளோம். இதற்கு  எப்போது தான் தீர்வு கிடைக்கும் என தெரிய வில்லை” என்றனர்.

இதேபோல, கும்பகே ாணம், சோழன்மாளிகை, திருவிடைமருதுார், ஐம்பது மேல் நகரம், திட்டை, அம்மாப் பேட்டை, நரசிங்கமங்கலம் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில்  சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதில், நர சிங்கமங்கலம் பகுதியில் நாற்று நடவு செய்து 40 நாட்களே ஆன இளம் பயிர் கள் மூழ்கிய நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு  இழப்பீடு வழங்க வலி யுறுத்தி விவசாயிகள் கொட்டும் மழையில், வயலில்  இறங்கி போராட்டம் நடத்தி னர்.

வாழை பாதிப்பு:  திருவையாறு பகுதியில்  வளப்பக்குடி, திருவை யாறு, ஆச்சனுார், பாபநாசம்  பகுதிகளில் வாழை தோட்டங்களில் மழைநீர் தேங்கியதால், வாழையில் வேர் அழுகல் நோய் தாக்கும் அபாயம் உள்ள தாகவும், தொடர் மழையின்  காரணமாக திருவையாறு பகுதியில் சாப்பாடு இலைக் கான வாழை இலை வெட்டும் பணி பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் வெளி மாவட்டங்களுக்கு வாழை இலை அனுப்ப முடியாத தால், தினமும் ஒரு லட்சம்  வாழை இலைகள் தேக்க மடைந்துள்ளதாக விவசாயி கள் தெரிவித்துள்ளனர்.

வீடு சேதம்: கனமழை யால் 24 கூரை வீடுகளும், 13  ஓட்டு வீடுகளும் என 37 வீடு கள் சேதம் அடைந்துள்ளன. 7 கால்நடைகள் உயிரிழந்து உள்ளன. தாழ்வான இடங்க ளில் உள்ள வீடுகளில் மழை  நீர் சூழ்ந்ததால் பொது மக்கள் மிகுந்த அவதி யடைந்தனர்.