தஞ்சாவூர், ஏப்.24 - சிஐடியு மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் ஏற்றி வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி போ ராட்டம் நடத்தியதன் எதிரொலியாக, அதிகாரிகள் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையில் ஏப்.25 (திங்கள் கிழமை) முதல் மாட்டு வண்டிகளுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள் ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா மருவூர் மணல் குவாரியில் கனரக வாகனங்களில், புதுக்கோட்டை யைச் சேர்ந்த தனியார் நிறுவனத் திற்கு மணல் அள்ள அனுமதி வழங்கி யதை கண்டித்து, சிஐடியு மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கடந்த வெள்ளிக்கிழமை மணல் ஏற்றி வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இப்போ ராட்டம் நடைபெற்றது. இதையடுத்து சிஐடியு மாவட்ட செயலாளர் சி.ஜெய பால், முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், சிபிஎம் ஒன்றிய செயலா ளர்கள் பூதலூர் தெற்கு சி.பாஸ்கர், பூத லூர் வடக்கு எம்.ரமேஷ், திருவை யாறு ஏ.ராஜா ஒன்றியக் குழு உறுப்பி னர் பிரதீப் ராஜ்குமார், மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் நிர்வாகிகள் பூத லூர் இமானுவேல், ரமேஷ், திருவிடை மருதூர் கோவிந்தராஜ், பாபநாசம் நாக ராஜ், கும்பகோணம் லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன், திருவை யாறு வட்டாட்சியர் நெடுஞ்செழியன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர் கல்யாண சுந்தரம், திருவையாறு காவல் துறை ஆய்வாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில், ஏப்.25 (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் 12 மணி வரை, வார நாட்களில் ஞாயிற்றுக்கிழமை தவிர, ஆறு நாட்களும் மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி வழங்கப்படும். 25 கன அடி மணலுக்கு ரூ. 350 கட்டணம் வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் பூதலூர் தாலுகா திருச்சென்னம் பூண்டி, கும்பகோணம் தாலுகா கொத்தங்குடி மணல் குவாரிகளை மாட்டு வண்டிகளுக்காக விரைவில் திறக்க நடவடிக்கை எடுப்பது என அதி காரிகளால் உறுதி அளிக்கப்பட்டது.