கும்பகோணம், ஜூலை 10 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கும்பகோணம் கிளை சார்பில் மாபெரும் கலை இலக்கிய இரவு நிகழ்ச்சிகள் கும்பகோணத்தில் நடை பெற்றன. மாநகரத் தலைவர் கலைச் செல்வன் தலைமை வகித் தார். மாநகரச் செயலாளர் அசோக்குமார் வரவேற்றார். மாவட்டத் தலைவர் சா.ஜீவ பாரதி நிகழ்ச்சியை துவக்கி வைத்து மண்ணின் மகி மையை விளக்கிப் பேசி னார். மாநகர துணை மேயர் சுப.தமிழழகன், மாநில துணை பொதுச் செயலாளர் களப்பிரன், மாவட்ட செய லாளர் விஜயகுமார் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர். நிகழ்ச்சியில் ‘கும்பகோ ணம் எழுத்தாளுமைகளின் குபாரா முதல் தேணுகா வரை’ என்ற தலைப்பில் மாநில சிறப்புத் தலைவர் தமிழ்ச்செல்வன், தனித்து வம் நமது உரிமை, பன்மைத் துவம், நமது வலிமை’ என்ற தலைப்பில் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட் சண்யா ஆகியோர் கருத்து ரையாற்றினர். வேலூர் சாரல் கலை குழுவின் பறையாட்டம், விழுதுகள் மண்ணின் கலை கள் குழுவின் சிலம்பாட்டம், கரிசல் கிருஷ்ணசாமி, கரிசல் கருணாநிதி, தஞ்சை தமிழ்வாணன் ஆகியோரின் கிராமிய பாடல் நிகழ்ச்சி களுடனும், வல்லம் தாஜ் பால், ஆனந்த சயனன், சுதா ஆகியோரின் கவித்தூரலுட னும் நடைபெற்றது. பட்டிமன்ற நடுவர் மதுக் கூர் ராமலிங்கம் தலைமை யில் ‘இன்றைய சூழலில் மனித நேயம் பொங்கு கிறதா? மங்குகிறதா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
பட்டி மன்றத்தில் பொங்குகிறது என்ற அணிக்கு கவிமுனி யும், மங்குகிறது என்ற அணிக்கு ஆர்.கண்ணதாசன் - தமிழ்ச்செல்வி ஆகியோர் பங்கு பெற்றனர். இறுதி யில் புதுகை பூபாலன் குழு வினரின் அரசியல் நை யாண்டி தர்பார் நடைபெற் றது. முன்னதாக வெள்ளை யனே வெளியேறு இயக்க தியாகிகள் நினைவிடத்தி லிருந்து, கலைஞர்கள்-ரசி கர்கள் பறை இசையுடன் கலைப் பேரணி நடை பெற்றது. பேரணிக்கு ஆர்.ராஜகோபாலன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் முருக.சர வணன் பேரணியை துவக்கி வைத்தார். வழிநெடுக பறை யாட்டம், சிலம்பாட்டம், கர காட்டத்துடன் நிகழ்ச்சி நிறை வுற்றது. நிகழ்ச்சியை சு.சர வணன், இலக்கியன் ஆகி யோர் தொகுத்து வழங்கினர். மாநகரப் பொருளாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.
பேரணி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் கும்பகோணம் கிளை சார்பில் கும்பகோணம் தியாகிகள் நினைவு இடத்தி லிருந்து கலை பேரணி சென்றது. பேரணிக்கு ராஜ கோபால் தலைமை வகித் தார். சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சரவணன் துவக்கி வைத்தார். தப்பாட்ட கலைஞர்களின் கலை நிகழ்ச்சியுடன் பேரணி நடை பெற்றது. மாவட்ட தலைவர் ஜீவபாரதி, மாவட்ட செய லாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.