districts

img

தீண்டாமை வன்கொடுமைக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு விதொச தஞ்சாவூர் மாவட்ட மாநாடு கோரிக்கை

தஞ்சாவூர், டிச.29-  அகில இந்திய விவசா யத் தொழிலாளர்கள் சங்கத்  தின் தஞ்சாவூர் மாவட்ட 8-ஆவது மாநாடு புதனன்று  அம்மாபேட்டை ஊராட்சி யில் தோழர் ஜி.மணி நினை வரங்கில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஆர்.வாசு தலை மை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வெ. ஜீவக்குமார் கொடியேற்றி வைத்தார். வரவேற்புக்குழு தலைவர் ஏ.நம்பிராஜன் வர வேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் சி.நாகராஜன் அஞ்சலி தீர்மானம் வாசித் தார்.  மாநில பொதுச் செயலா ளர் வி.அமிர்தலிங்கம் துவக்கவுரையாற்றியனார். மாவட்டச் செயலாளர் கே. பக்கிரிசாமி வேலை அறிக்கை முன்மொழிந்தார். மாவட்டப் பொருளாளர் கே. அபிமன்னன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். சிஐ டியு மாவட்டச் செயலாளர்  சி.ஜெயபால், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். மாநிலச் செயலாளரும், கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினருமான எம். சின்னத்துரை நிறைவுரை யாற்றினார்.  மாநாட்டில், மாவட்டச் செயலாளராக ஆர்.வாசு, மாவட்டத் தலைவராக ஆர். பிரதீப்ராஜ்குமார், பொரு ளாளராக சி.நாகராஜன் உள்ளிட்ட 27 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய் யப்பட்டது.  சிபிஎம் மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன்,  வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் க.அருளரசன், மாதர் சங்க மாவட்டச் செய லாளர் இ.வசந்தி, வரவேற் புக் குழு தலைவர் ஏ.நம்பி ராஜன், செயலாளர் கே.கே.சேகர், பொருளாளர் யூ.சரவ ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மாநாட்டில், 100 நாள்  வேலையை 200 நாட்களாக வும், சம்பளத்தை ரூ.600 ஆக வும் உயர்த்தி வழங்க வேண்  டும். தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை வன்கொடு மைக்கு எதிராக தமிழக அரசு உறுதியான நடவடிக்கை களை எடுக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் சமத்துவ பொது சுடுகாடு இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.  அரிசி, மண்ணெண் ணெய் உள்ளிட்ட பொருட்  களை பொது மக்களுக்கு கூடுதலாக வழங்க வேண் டும். பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை கை விட்டு, வழக்கம்போல் வழங்கும் அரிசியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.