districts

கடைக்காரர்களை மிரட்டி பணம் பறிப்பு: அரிவாளால் வெட்டப்பட்ட முதியவர் பலி

தஞ்சாவூர், ஜூன் 13-  தஞ்சாவூர் கரந்தை ராஜாராமன் மடத்து தெருவைச் சேர்ந்தவர் ஜி.செந்தில்வேல் (80).  கரந்தை கடைவீதியில் மளிகை கடை நடத்தி  வந்த இவர், கரந்தை வணிகர் சங்கப் பொருளா ளராகவும் இருந்து வந்தார். இவரது கடைக்கு  ஜூன் 9 ஆம் தேதி இரவு வந்த ராஜாராமன்,  மடத்து தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் (30),  பூக்குளம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (19)  ஆகியோர் பணம் கேட்டு மிரட்டினர். பணம்  தர மறுத்த செந்தில்வேலை இருவரும் அரிவா ளால் வெட்டிவிட்டு, தப்பிச் சென்றனர். இவர்கள் மேலும் 3 கடைகளில் இருவரும்  பணம் கேட்டு மிரட்டி 2 பேரை அரிவாளால் வெட்டினர். இதில் மருந்துக் கடையில் ரூ.2,500 ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து ஹரி ஹரன், தினேஷை கைது செய்தனர். இச்சம்பவத்தில், தப்பி ஓடும் போது படு காயமடைந்த 2 பேரும், வெட்டுக்காயம் அடைந்த முதியவர் செந்தில்வேல் ஆகி யோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பெற்று வந்த செந்தில்வேல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்தார். இதை மேற்கு காவல் நிலையத்தினர் கொலை  வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.