சென்னை:
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள வாகைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அணைக்கரை முத்து. இவர் தன் தோட்டத்தை சுற்றி மின் வேலி அமைத்ததாக கூறி வனத்துறையினர் அவரை சிவசைலம் வனசரக அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.இந்நிலையில் விவசாயி அணைக்கரை முத்து திடிரென உயிரிழந்தாக கூறப்படுகிறது. வனத்துறையினர் விசாரணையில் முதியவரை தாக்கியதால் தான் அவர் இறந்ததாக கூறி அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக வந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.வழக்கை விசாரித்த நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், இச்சம்பவம் குறித்து வனத்துறை தலைமை வனப்பாதுகாவலர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.