தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சகாஜி தெருவில் மாநிலங்களவை உறுப்பினர் அலுவல் வேலைகளை செய்வதற்கு புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அலுவலகத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா திறந்து வைத்தார். மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம், மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.